நாட்டின் இருபெரும் கட்சிகள் அம்பானிகள் உள்ளிட்ட முதலாளிகளின், மூலதனங்களின் பாக்கெட்டில் நெளிந்து கொண்டிருக்க, இவர் மட்டும் அம்பானிகளையும் டாட்டாக்களையும் கடுமையாக தாக்கத் தொடங்கினார்.
இந்த அமைப்பைச் சுரண்டி டன் கணக்கில் பணத்தில் அவர்கள் புரள்வதாக ஒரு அறிக்கையை அவர் வெளியிட்டார். முதன் முதலாக நிறுவனங்கள் அர்விந்த் கெஜ்ரிவால் மீது அவரது அரசியல் காரணங்களுக்காஅ கடும் கோபமடைந்து பதில் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.
அனில் அம்ப ான ியை முதலில் பிடித்தார் கெஜ்ரிவால், இவரது மின் வினியோக நிறுவனமான பி.எஸ்.இ.எஸ். யமுனா, ராஜ்தானி ஆகிய நிறுவனங்கள் பிளாக் மெய்ல் செய்கிறது என்றார். காரணம் கெஜ்ரிவால் மின் கட்டணத்தை பாதியாக குறைத்தவுடன் சப்ளை கிடையாது என்று மறுத்துள்ளது அனில் அம்பானி நிறுவனம்.