Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியின் வரலாற்று உளறல்கள்

Webdunia
ஞாயிறு, 10 நவம்பர் 2013 (11:13 IST)
பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக நாடு முழுவதும் வலம் வரும் நரேந்திர மோடி - அவ்வப்போது கூட்டங்களில் உதிர்த்து வரும் வரலாற்று உளறல்கள் பற்றிய ஒரு தொகுப்பு.
FILE

திருச்சியில் மோடி:- தண்டியில் காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்தியபோது, இங்கே வேதாரண்யத்தில் வ.உ.சி. தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது.

வரலாறு:- வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்துக்கு தலைமை தாங்கியது வ.உ.சி. அல்ல; இராஜகோபாலாச்சாரி.

பாட்னா கூட்டத்தில் மோடி:- குப்தர் வம்சம் பற்றி நாம் நினைக்கும்போது உடனடியாக சந்திரகுப்தரின் ராஜநீதிதான் நினைவுக்கு வருகிறது.

வரலாறு:- சந்திரகுப்தர், குப்த வம்சத்தைச் சார்ந்தவர் அல்ல; அவர் மவுரிய வம்சத்தைச் சார்ந்தவர்.

பாட்னா கூட்டத்தில் மோடி:- மாவீரன் அலெக்சாண்டர் இராணுவம், உலகத்தையே படையெடுத்து வெற்றி கண்டது. ஆனால், பீகார் தக்சசீலாவில் பீகாரிகளால் அதே இராணுவம் தோல்வி அடைந்து ஓடியது. அதுதான் பீகாரிகள் வலிமை.

வரலாறு:- அலெக்சாண்டர் இராணுவம் கங்கையைக் கடந்து வரவே இல்லை. பீகாரிகளால் தோற்கடிக்கப்படவும் இல்லை. தக்சசீலாவும் பீகாரில் இல்லை; அது பாகிஸ்தானில் இருக்கிறது.

கான்பூரில் மோடி:- திட்டக் குழுவுக்கு தலைமை தாங்கும் பிரதமர் ஒரு பொருளாதார நிபுணர். நாளொன்றுக்கு கிராமத்தில் குடும்ப வருமானம் ரூ.26-க்கு அதிகமாகவோ அல்லது நகரத்தில் ரூ.32க்கு அதிகமாகவோ இருக்குமானால், அவர்கள் வறுமைக் கோட்டை கடந்து விட்டதாகக் கூறுகிறார். இது ஏற்கக் கூடியது தானா?

உண்மை:- திட்டக்குழு இந்த வரையறையை ஒரு குடும்பத்துக்குச் சொல்லவில்லை. தனி மனிதருக்குச் சொல்கிறது. அத்துடன் மோடி குறிப்பிடுவதுபோல் வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படவில்லை. செலவின் அடிப்படையில் தான் திட்டக் குழு நிர்ணயித்துள்ளது.
FILE

மோடி:- வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சி வீதம் 8.4 சதவீதமாக இருந்தது. இப்போது ஐக்கிய முன்னணி ஆட்சியில் 4.8 சதவீதம்தான்.

உண்மை:- வாஜ்பாய் ஆட்சியில் முதல் 6 ஆண்டில் சராசரி வளர்ச்சி 7 சதவீதம். கடைசி 5 ஆண்டு சராசரி வளர்ச்சி 5.9 சதவீதம் என்று மறுத்துள்ளார் ப.சிதம்பரம்.

டெல்லி பல்கலைகழகத்தில் மோடி:- குஜராத் பெற்றுள்ள வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சி.

உண்மை:- மனித மேம்பாட்டு குறியீடுகளின்படி குஜராத் சுகாதாரத்தில் 16 ஆவது மாநிலமாகவும், கல்வியில் 14 ஆவது மாநிலமாகவும் கட்டமைப்பு வசதிகளில் 11 ஆவது மாநிலமாகவும் இருக்கிறது.

மோடி:- பட்டேல் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்து கொள்ளவில்லை.

உண்மை:- நேரு கலந்து கொண்டார். "டைம்ஸ் ஆப் இந்தியா" உள்ளிட்ட நாளேடுகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் தனது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments