பெரும்பாலும் வார இறுதியில் சனிக்கிழமைகளில் வேலை பார்க்கும் இடங்களில் சம்பளம் வாங்கும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தங்களிடம் உள்ள கள்ளநோட்டுக்களை சாலையோரம் வியாபாரம் செய்பவர்களிடம் கொடுத்து பொருட்களை வாங்கி மீதி பணம் பெற்று விடுகின்றனர். கள்ளநோட்டுகள் கைமாற்றும் வரை வேலை பார்க்கும் கும்பல் பின்னர் கொல்கத்தா சென்று மீண்டும் பணத்துடன் வருகிறார்கள்.
கிழக்கு தாம்பரத்தில் சாலையோர கடையில் அப்துல் அமீது 500 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து 60 ரூபாய்க்கு செயின் வாங்கி மீதி பணம் பெற்றுள்ளான். போலீசார் கூறிய பின்னர் தான் அந்த வியாபாரிக்கே தான் வாங்கியது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. அந்த அளவிற்கு கள்ள நோட்டுகள் அச்சு அசலாக அச்சடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.