Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரம்மபுத்திரா நதியை திருப்ப சீனா திட்டம்?

Webdunia
திங்கள், 13 ஜூன் 2011 (17:01 IST)
இந்தியா மற்றும் பங்காளதேஷ் நாடுகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த பகுதிக்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல் இந்தியா - சீனா இடையே ஒரு புதிய மோதலுக்கு வழி வகுக்கலாமமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தவர்களுக்கு தனி விசா,அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் கொண்டாடுவது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைவது என இந்தியாவை கடந்த காலங்களில் பல வகைகளில் சீண்டி வந்துள்ளது சீனா.

பிரம்மபுத்திரா, சீனாவின ஆதிக்கத்திற்குட்பட்ட திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு,இந்தியாவின் வடகிழக்கே அஸ்ஸாம் மாநிலம், வங்காள தேசம் வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கின்றது.

மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு 1,700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது.

பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருண ாச ் ச ல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது. சமவெளிப்பகுதியில் இந ்த நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அஸ்ஸாம் மாநிலத்தில் நுழைகிறது.

இவ்வாறு இந்தியாவுக்கு, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களின் வளத்திற்கு ஆதாரமான பிரம்மபுத்திரா நதியை வைத்து, சீனா அவ்வப்போது கொடுத்து வரும் குடைச்சல்களில் ஒன்றுதான் தற்போதைய நதியை திருப்பிவிடும் பிரச்சனை.

ஏற்கனவே ஒரு ஆண்டுக்கு முன்னர் பிரம்மபுத்திரா நதியின் மீது,மின் உற்பத்திக்கான நீர் மின்திட்டத்திற்காக சீனா நீர் தேக்கம் ஒன்றை கட்டுவதாக வெளியான செய்தி பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து அப்போதைய மத்திய நீர்வள அமைச்சர் பி.கே.பன்சால் இடம் கேட்டபோது, "பிரம்மபுத்திரா மீது சீனா கட்டுவது நீர்த் தேக்கம் அல்ல என்றும்,நீர் மின்திட்டத்திற்கான ஒரு சிறிய அணைதான் என்றும் கூறியிருந்தார்.

நமது எல்லையில் இருந்து 1,100 கி.மீ. தூரத்தில் அணை கட்டப்படுகிறது. இப்படிப்பட்ட 15 அணைகளை சீனா கட்டியுள்ளது. அவர்கள் நாட்டில் ஓடும் நதியின் பகுதி மீது நமக்கு எந்த உரிமையும் இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிரம்மபுத்திரா நதியில் நமக்கு வரவேண்டிய 79 பில்லியன் கன மீட்டர் நீர் வரவேண்டும்.அந்த நீர் திசை திருப்பப்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில்தான் தற்போது பிரம்மபுத்திரா நதியை, அதன் மலைப் பகுதியிலிருந்தே தங்கள் நாட்டின் வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட சீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகி உள்ளது.

இவ்வாறு சீனாவின் வடமேற்கு பகுதிக்கு, குறிப்பாக சின்ஜியான் மாகாணத்திற்கு பிரம்மபுத்திரா (சீனாவில் ஸாங்போ) நதியை திருப்பிவிடுவது தொடர்பாக சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழு, புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

இந்த திட்டம் அமலானால், அது முந்தைய அணைக்கட்டும் திட்டம் போன்றல்லாமல், இந்தியாவுக்குள் வரும் நீர்வரத்தை குறைத்துவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார்கள் இந்திய நீர் வள நிபுணர்கள்.

ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சீனா உறுதியாக இருக்கிறது. இதனை சீன அறிவியல் கூட நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள விஞ்ஞானி வாங் குவாங்கியான் உறுதிபடுத்தியுள்ளார்.

ஸாங்போ (பிரம்மபுத்திரா) நதியை,மலைப்பாதையிலிருந்து வறட்சி பாதித்த சின்ஜியான் மாகாணத்திற்கு திருப்பிவிட்டால், அது நிச்சயம் ஆண்டுதோறும் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என்கிறார் குவாங்கியான்.

சீன மாகாணத்தின் வறட்சி பிரச்சனை தீர்ந்துவிடும்;ஆனால் பிரம்மபுத்திராவில் நீர் வரத்து குறைந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வறட்சியின் பிடிக்குள் சிக்கிக்கொள்ளுமே...?

இந்தியாவின் மத்திய அரசுக்கு சீனாவின் இந்த திட்டம் குறித்து ஏதேனும் தெரியுமா? இதனை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதா? என்று இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு, இந்தியா இது குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்திடமிருந்து இது குறித்து அறிக்கை கேட்டுள்ளதாகவும், நிலைமையை அவதானிக்க தூதரக ரீதியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிலளித்தார்.

இந்த பிரச்சனையை உடனடியாக சீன அரசின் கவனத்திற்கு மத்திய அரசு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று பா.ஜனதா பேச்சாளர் பிரகாஷ் ஜாவேத்கர் வலியுறுத்தியுள்ளார்.

வழக்கமாக இதுபோன்ற இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சீன அதிகாரிகள் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளை கேட்டுவிட்டு அமைதியாகிவிடுவது போன்று இந்த முறையும், இந்திய மத்திய அரசு அமைதியாக இருந்தால், அது பின்னாளில் ஒட்டுமொத்த பிரம்மபுத்திர நதி நீரையும் பல அமைகளை கட்டி தங்களுக்கு திருப்பிவிடக்கூடிய அளவிற்கு சீனாவுக்கு துணிச்சலைக் கொடுத்துவிடும்.

எனவே போர்க்குற்றத்திலிருந்து இலங்கையை முட்டுக்கொடுத்து காப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்திய காங்கிரஸ் அரசு பிரம்மபுத்திரா விடயத்திலும் காட்டினால் நன்றாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேபாளத்தை உலுக்கி வெள்ளம், நிலச்சரிவு! 112 பேர் பலி!

“உழைத்தவர்களுக்கு தியாகி பட்டம் இல்லை” - ஊழல் வழக்கில் சிறை சென்றவர் தியாகியா? - இபிஎஸ் கேள்வி.!!

ஷியா முஸ்லீம்களை கொல்லும் சன்னி முஸ்லீம்கள்!? லெபனானில் கலவரம்! - யார் காரணம் தெரியுமா?

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

Show comments