Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராடியா உதவியால் டாடாவுக்கு கிடைத்ததா ரூ.29,000 கோடி?

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (17:35 IST)
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் கார்ப்பரேட் தரகர் நீரா ராடியாவின் தரகு வேலை ஊரறிந்த ஒன்றுதான் என்றாலும், தற்போது குஜராத்தில் அவர் டாடா நிறுவனத்திற்காக தரகு வேலை பார்த்து, 29,000 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிறுவனத்திற்கு ஆதாயம் ஈட்டி கொடுத்துள்ளார் என்று எழுந்துள்ள புகார் புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளது.

ஏற்கனவே 2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில் டாடா தொலைபேசி நிறுவனத்திற்காக ராடியா, முந்தைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவிடம் பேசிய பேரம் தொடர்பான தொலைபேசி பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி பதிவுகள் வெளிவந்து ஏக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் 2ஜி விவகாரத்தில் டாடா நிறுவனம் முறைகேடாக குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதா என்பது குறித்து ஒருபுறம் சிபிஐ விசாரித்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான் குஜராத்தில் நரேந்திர மோடி அரசாங்கம், டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலைக்கு 29,000 கோடி ரூபாய் வரை சலுகைகளை வாரி வழங்கியுள்ளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் அனல் குற்றச்சாற்றை கிளப்பியுள்ளது.

முதலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானா கார் தொழிற்சாலை மேற்குவங்க மாநிலம் சிங்கூரில்தான் செயல்படுவதாக இருந்தது.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளெல்லாம் தொடங்கிய நிலையில்தான், தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு விவசாய நிலங்களை வாங்கியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்த, போராட்டம், துப்பாக்கிச் சூடு என நிகழ்ந்த அமளிகளை பார்த்து, கடைசியில் சிங்கூரில் கார் தொழிற்சாலையை அமைக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

வேறு எங்கு இத்தொழிற்சாலையை நிறுவலாம் என டாடா இடம் தேடத் தொடங்கவும்தான், இதற்காகவே தருணம் பார்த்து காத்திருந்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தங்கள் மாநிலத்தில் அத்தொழிற்சாலையை தொடங்க அழைப்பு விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவுக்காக, அவரது தரகர் நீரா ராடியா களத்தில் இறங்கியதாக கூறப்படுகிறது.

அதே சமயம் ரத்தன் டாடாவும் சம்பிரதாயத்திற்கு ஓரிமுறை மோடியை சந்தித்துப் பேசினார். அடுத்தடுத்து ராடியாவுக்கும், குஜராத் அரசுக்கும் இடையே மளமளவென நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளில் நிலம் ஒதுக்கீடு, வரிச்சலுகை உள்ளிட்ட பல சலுகைகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

ஆனால் அது சலுகைகள் எந்த அளவிற்கானது என்பது குறித்து இதுநாள் வரை வெளியில் தெரியாமல் இருந்த நிலையில், குஜராத் அரசிடமிருந்து டாடா மோட்டார்ஸ், ரூ.29,000 கோடி வரை பல சலுகைகளை பெற்றுள்ளது என்று ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் குஜராத் மாநிலத்தின் எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ. அர்ஜூன் மோத்வாடியா.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை நிறுவப்பட்டபோது, டாடாவின் தரகரான நீரா ராடியா,முதலமைச்சர் மோடியிடம் சாமர்த்தியமாக பேசி டாடா மோட்டார்ஸ்க்கு இந்த சலுகைகளை பெற்றுக்கொடுத்ததாக குஜராத் சட்டசபையில் நேற்று பேசிய மோத்வாடியா குற்றம்சாட்டினார்.

இதற்கு தம்மிடம் வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூற சட்டசபையில் ஏக பரபரப்பு கிளம்பியது.

தொடர்ந்து இது தொடர்பாக பல பகீர் குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசிய அவர், "குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைக்க டாடாவுக்கு குஜராத் அரசு அனுமதி அளித்தபோது, செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவேண்டும். ஆனால் அவ்வாறு உள்ளூரை சேர்ந்தவர்கள் வேலையில் அமர்த்தப்படவில்லை" என்றும் போட்டுத்தாக்க ஆளும் கட்சி ஏகமாக நெளிய வேண்டியதாகிவிட்டது.

ஹூம்...! 2ஜி, நானோர் கார் தொழிற்சாலை என இன்னும் எதிலெல்லாம், யார் யாருக்கெல்லாம் நீரா ராடியாவின் தரகு வேலை தகிடுதத்தங்கள் அரங்கேறியுள்ளதோ? அந்த சிபிஐ-க்கே வெளிச்சம்!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Show comments