Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌விஜயகா‌ந்‌‌தால் தி.மு.க. வெ‌ற்‌றியை தடு‌‌க்க முடியுமா?

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2010 (18:09 IST)
'' நான ் கூட்டணிக்க ு அவசரப்ப ட மாட்டேன ். அத ை பிறக ு பார்த்துக ் கொள்வோம ். ஆனால ், அடுத் த முற ை த ி. ம ு.க. வ ை ஆட்சிக்குவ ர விடமாட்டேன ்'' எ‌ன்று பே‌சியுள்ளார் காஞ்சிபுரம் மாவ‌ட்ட‌ம் ஒலிமுகமதுபேட்டையில ் நடந்த பக்ரீத ் கொண்டாட்டத்தில் நே‌ற்று பங்கேற்ற தே.மு.‌தி.க தலைவ‌ர் விஜயகாந்த்!

கருணாநிதி மற்றும் திமுக மீது ஈழத்தமிழர்களை காப்பாற்ற தவறியது, தொலைக்காட்சி மற்றும் திரைப்பட துறைகளை ஆக்கிரமித்தது, ஸ்பெக்ட்ரம் போன்ற பல குற்றச்சாற்றுக்கள் ஒருபுறம் சுமத்தப்பட்டாலும், நல்ல பல மக்கள் நலத்திட்டங்களை அவரது அரசு செய்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

2006 ஆ‌ம் ஆ‌ண்டு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யுட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்து ஆ‌ட்‌சியை ‌பிடி‌த்தது ‌தி.மு.க. 5வது முறையாக கருணா‌நி‌தி முதலமை‌ச்சரானா‌ர். ஆ‌ட்‌சி‌க்கு வ‌ந்தது‌ம் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் முத‌ல் கையெழு‌த்‌தி‌ட்டா‌ர்.2 வதாக கூ‌ட்டுறவு ‌‌விவசாய கடனை ர‌த்து செ‌ய்தா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து குடு‌ம்ப அ‌ட்டை உ‌ள்ள அனைவரு‌க்கு‌ம் இலவச வ‌ண்ண‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்ட ி, ஏழை பெ‌ண்களு‌க்கான ‌திருமண‌த்‌தி‌ற்கு 25 ஆ‌யிர‌ம் ரூபா‌ய ், க‌ர்‌ப்‌பி‌ணி பெ‌ண்களு‌க்கு 6 ஆ‌யிர‌ம் ரூபா‌ய ், பிற்படுத்தப்பட்டோருக்க ு 25 லிருந்த ு 31 சதவீதமாகவும ், தாழ்த்தப்பட்டோருக்க ு 16 லிருந்த ு 18 சதவீதமாகவும ் இ ட ஒதுக்கீட்ட ை உயர்த்தியத ு.

உருத ு பேசும ் முஸ்லிம்கள ், கொங்க ு வேளாளர்கள ை பிற்படுத்தப்பட்டோர ் பட்டியலில ் சேர்த்தத ு. வன்னியர ் சீர்மரபினர ் உள்ளிட் ட மிகவும ் பிற்படுத்தப்பட்டோருக்க ு 20 சதவீ த தன ி இ ட ஒதுக்கீட ு அளித்தத ு. தாழ்த்தப்பட்டோருக்கும ், வருமா ன வரம்புக்க ு உட்பட்ட ு பெண்களுக்கும ் பட்டப்படிப்ப ு வர ை இலவசக ் கல்வ ி.

பெரியார ் நினைவ ு சமத்துவபுரம ், உருத ு அகாதெம ி, குமர ி முனையில ் திருவள்ளுவர ் சில ை, தைத ் திங்கள ் முதல ் நாள ை தமிழ ் புத்தாண்டா க அறிவித்தத ு, காமராஜர ் பிறந் த நாள ை கல்வ ி வளர்ச்ச ி நாளா க அறிவித்தத ு.

முஸ்லிம்களுக்க ு 3.5 சதவீ த தன ி ஒதுக்கீட ு, அருந்ததியர்களுக்க ு 3 சதவீ த உள ் ஒதுக்கீட ு, அனைத்துச ் சாதியினரும ் அர்ச்சகராகும ் சட்டம ், பெண்களுக்கும ் சொத்துரிம ை சட்டம ், அரசுப ் பணியில ் பெண்களுக்க ு 30 சதவீ த ஒதுக்கீட ு, கட்டா ய மதமாற் ற தடைச்சட்டம ் ரத்த ு, ஏழைப ் பெண்கள ் திரும ண உதவித ் திட்டம ், விதவைகள ் மறும ண உதவித ் திட்டம ், கலப்ப ு திருமணத்த ை ஊக்குவிக் க நித ி உதவ ி, உள்ளாட்ச ி அமைப்புகளில ் பெண்களுக்க ு 33 சதவீ த ஒதுக்கீட ு.

மகளிர ் சு ய உதவிக்குழ ு திட்டம ், தமிழ ் - ஆங்கிலம ் இருமொழித ் திட்டம ், 12 ஆம ் வகுப்ப ு வர ை தமிழ ் கட்டாயப ் பாடம ், தமிழுக்க ு செம்மொழ ி அந்தஸ்த ு, பேரு‌ந்துகள ் நாட்டுடைம ை, போக்குவரத்த ு கழகங்கள ் உருவாக்கம ், புதுமு க வகுப்ப ு வர ை அனைவருக்கும ் இலவசக ் கல்வ ி, 1 கோடிய ே 85 லட்சம ் குடும்பங்களுக்க ு ஒர ு ரூபாய்க்க ு ஒர ு கில ோ அரிச ி.

மானி ய விலையில ் மளிகைப ் பொருள்கள ், வருமுன ் காப்போம ் திட்டம், 1 கோட ி ஏழைகளுக்க ு உயிர ் காக்கும ் உயர ் சிகிச்சைக்கா ன கலைஞர ் காப்பீட்டுத ் திட்டம ். ஏழைகளு‌க்கு இலவச கா‌ன்‌கி‌ரீ‌ட் ‌வீடு என இ‌ப்படி பல‌ ந‌ல்‌ல‌‌‌ தி‌ட்ட‌‌ங்களை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ செயல்படுத்தியுள்ளா‌ர்.

அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌ச ி, இலவச வ‌ண்ண‌‌த் தொலை‌க்கா‌ட்‌சி பெ‌ட்ட ி, கலைஞர ் காப்பீட்டுத ் திட்டம ், ஏழைகளு‌க்கு இலவச கா‌ன்‌கி‌ரீ‌ட் ‌வீடு ஆ‌கியவை ம‌க்க‌ள் ம‌த்‌தி‌‌யி‌ல் ந‌ல்ல வரவே‌ற்பை பெ‌ற்று‌ள்ளது.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட சூ‌ழ்‌நிலை‌‌யி‌ல ், அடு‌‌த்துமுறை ‌தி.மு.க.வை ஆ‌ட்‌சி‌க்கு வர‌விட மா‌ட்டே‌ன் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் சொ‌ல்வது, எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது அவருக்கே வெளிச்சம்! கூ‌ட்ட‌ணி‌க்கு அவசர‌ம் கா‌ட்ட மா‌ட்டே‌ன் எ‌ன்று‌ம் ‌‌விஜயகா‌ந்‌த் கூ‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

ஒரு ப‌க்க‌ம் ‌விஜயகா‌ந்‌‌த்துட‌ன் அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்‌ட‌ணி கு‌றி‌த்து பே‌சி வ‌ந்தாலு‌ம் ஜெயல‌‌லிதா‌வி‌ன் கு‌றி‌க்கோ‌ள் கா‌‌ங்‌கிரசை இழு‌த்து‌வி‌ட வே‌‌ண்டு‌ம் எ‌ன்பதுதா‌ன ். ம‌க்களுட‌ன் கூ‌ட்‌ட‌ண ி, தெ‌ய்வ‌த்துட‌ன் கூ‌ட்ட‌ணி எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றி வ‌ந்தாலு‌ம் வரு‌ம் ச‌ட்ட‌ப்பேரவை பொது‌த்தே‌ர்த‌லி‌ல் ஏதாவது ஒரு க‌ட்‌சி‌யுட‌ன் கூ‌ட்ட‌ணி வை‌த்துதா‌ன் ஆக வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல் 2006ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த பொது‌த்தே‌ர்த‌லி‌ல் ஒரு இடமு‌ம ், 2009 ஆ‌ம் ஆ‌ண்டு நடைபெ‌ற்ற நாடாளும‌ன்ற தே‌ர்த‌லிலு‌ம் ஒரு ‌இடமு‌‌ம் ‌கிடை‌க்காம‌ல் போனது போ‌ல் வரு‌ம் ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌லி‌லும் அதே ‌நிலை ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு அ‌திகமாக இரு‌க்‌கிறது.

இ‌ன்று கூட த ே. ம ு. த ி.க. அமைப்புச ் செயலாளர ் பண்ருட்ட ி ராமச்சந்திரன ், காங்கிரஸ ் புதிதா க 3 வத ு அண ி அமைக் க முன ் வந்தால ் நாங்கள ் அத ை ஆதரிப்போம் எ‌ன்று‌ம், இன்னும ் ஓரிர ு மாதங்களில ் தெளிவா ன முடிவ ு ஏற்பட்ட ு விடும் எ‌ன்று‌ம் கூ‌‌றி‌யிரு‌க்‌கிறா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸ் தலைமை‌யி‌ல் கூ‌ட்ட‌ணி அமை‌ந்தா‌ல் தா‌ன் முதலமை‌ச்சராகு‌ம் வா‌ய்‌ப்பு ‌‌பிரகாசமாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ‌‌‌‌விஜயகா‌ந்‌த் ‌நினை‌த்தாலு‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள கா‌ங்‌கிர‌ஸ் மூ‌த்த தல ை( வ‌ர ்) க‌ள் ‌விடுவா‌ர்களா எ‌ன் ன?

'' தன‌க்கு பதவ ி ஆச ை வந்துவிட்டதா க கூறு‌ம் கருணா‌நி‌த ி, பதவ ி ஆச ை இல்லாமல ா தந்த ை முதலமை‌ச்சர ் பதவியிலும ், மகன் மு.க.‌ஸ்டா‌லி‌ன் துண ை முதலமை‌ச்சர ் பதவியிலும ் இருக்கிறார்கள ்'' எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளார் ‌விஜயகா‌ந்‌த்.

‌ ஸ்டா‌லி‌‌னி‌ன் அர‌சிய‌ல் வா‌ழ்‌க்கை ‌திடீரென்று வ‌ந்தது இ‌ல்லை. ‌சிறுவய‌தி‌லேயே அர‌சிய‌‌லி‌ல் ஈடுப‌ட்டு ‌மிசா கால‌த்தில் ‌சிறை‌யி‌ல் பல கொடுமைகளை அனுப‌வி‌த்தவ‌ர். நா‌ள் ‌விடாம‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் சு‌ற்று‌ப்பயண‌ம் செ‌ய்து வரு‌ம் ‌ஸ்டா‌லி‌ன ், ப‌ல்வேறு ந‌ல‌த் ‌தி‌ட்ட உத‌விகளை வழ‌‌‌ங்‌கி ‌வரு‌கிறா‌ர். 100 ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு மே‌ல் மேடை‌யி‌ல் ‌நி‌ன்று மக‌ளி‌ர் குழு‌வி‌ற்கு சு‌ழ‌ல் ‌நி‌தி வழ‌ங்கு‌ம் சாதனையை படை‌த்து‌ள்ளா‌ர். அ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌‌ஸ்டா‌‌லினு‌க்கு துணை முதலமை‌ச்ச‌ர் பத‌வி கொடு‌ப்பது எ‌‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌‌ன்றே அர‌சிய‌ல் நோ‌க்க‌ர்க‌ள் கூறு‌கி‌ன்றன‌ர்.

ம‌க்களுட‌ன் கூ‌ட்ட‌ண ி, கூ‌ட்ட‌ணி‌‌க்கு அவசர‌ப்படமா‌ட்டே‌ன ், த‌னி‌த்துதா‌ன் ‌நி‌ற்பே‌ன் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் பேசுவதை ‌நிறு‌த்‌தி‌க்கொ‌ண்டு 2011ஆ‌ம் ஆ‌ண்டு ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்தலில் 10 இட‌ங்களையாவது ‌பிடி‌த்துக்கட்டிவிட்டு, அதன்பின்னர் திமுகவை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்று வீரவசனம் பேசுவது அவரது க‌ட்‌சி‌க்கு‌ம் ந‌ல்லத ு! அவரு‌க்கு‌ம் ந‌ல்லத ு!

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!