Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது இராமர் பிறந்த இடமே: நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2010 (13:56 IST)
FILE
அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாற ு:

1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா?

தீர்ப்ப ு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது.

இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. அது வடிவமற்றதாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வணங்குபவரின் பிரார்த்தனைக்கேற்ப உருவமாகவும் வரக்கூடியதாகும்.

2. தகராறுக்கு உட்பட்ட அந்த கட்டடம் ஒரு மசூதியா? அது எப்போது, யாரால் கட்டப்பட்டது?

தீர்ப்ப ு: தகராறுக்கு உட்பட்ட அந்தக் கட்டடம் பாபரால் கட்டப்படது. எந்த ஆண்டில் என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஆனால் அது இஸ்லாத்தின் நெறிகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. எனவே அது மசூதி என்பதற்குரிய தகுதியை பெற்றிருக்க முடியாது.

3. அங்கிருந்த ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்த மசூதி கட்டப்பட்டதா?

தீர்ப்ப ு: ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கட்டுமானத்தை தகர்த்தப் பின்னரே தகராறுக்குட்பட்ட இந்தக் கட்டடம் (பாபர் மசூதி) கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுமானம் ஒரு ஹிந்து மதம் தொடர்பானது என்று இந்திய தொல்லியல் துறை நிரூபித்துள்ளது.

4. அந்தக் கட்டத்திற்குள் இராமர் உள்ளிட்ட சிலைகள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் வைக்கப்பட்டதா?

தீர்ப்ப ு: தகராறுக்குட்பட்ட அந்த கட்டடத்தின் நடுக் கூரைக்குக் கீழே 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

5. தகராறுக்குட்பட்ட அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடும் மனுக்கள் ஏதேனும் அதற்குரிய கால வரையறையைத் தாண்டியவையா?

தீர்ப்ப ு: 1989 ஆம் ஆண்டு உ.பி. மாநிலம், லக்னோ சுன்னி மத்திய வக்்ப் வாரியம் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராக கோபால் சிங் விஷாரத் மற்றும் பலர் ஆகியோர் தொடர்ந்த மனு ஒ.எஸ்.எஸ். எண் 4,
1989 ஆம் ஆண்டு நிர்மோஹி அஹாரா மற்றும் ஒருவருக்கு எதிராக ஜமுனா பிரசாத் சிங் மற்றும் பலர் தொடுத்த மனு ஓ.எஸ்.எஸ். எண் 3 ஆகியன காலம் கடந்தவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன.

6. தகராறுக்கு உட்பட்ட கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி தொடர்பான நிலை என்ன?

தீர்ப்ப ு: இந்த தகராறுக்கு உட்பட்ட இடத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் இராம் சந்திர ஜி பிறந்த இடமும், சரண், சீதா ரசோய் ஆகியனவும், வழிப்படப்படும் மற்ற சிலைகளும், பொருட்களும் ஹிந்துக்களுக்கே உரியவை. நினைவிற்கு எட்டாத காலம் முதலே தகராறுக்குரிய அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தகராறுக்குட்பட்ட கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னர் அந்த இடத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22,23ஆம் தேதிகளுக்குட்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தகராறுக்குட்பட்ட இடத்தின் வெளிப்பகுதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதும். வெளியேயும், தகராறுக்கு உட்பட்ட உள்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகராறுக்குட்பட்ட கட்டுமானம் (பாபர் மசூதி) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை மசூதி என்று ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதி தரம் வீர் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் சொன்னார்னு கர்ப்பப்பையை ஏன் அறுத்துக்கல..? - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

செல்போனை கொடுக்காவிட்டால் கொலை செய்வேன்.. தலைமை ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன்..!

குடியுரிமை மறுப்பு விவகாரம்: டிரம்ப் உத்தரவை எதிர்த்து 22 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு..!

தற்கொலைக்கு முயன்ற பெண்.. ஆம்புலன்ஸ் கதவை திறக்க முடியாததால் பரிதாப பலி..!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 18,000 இந்தியர்கள்.. திரும்ப அழைக்க முடிவு..!

Show comments