Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர்களின் வாழ்வோடு விளையாடுகிறது சிறிலங்க அரசு: மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாற்று

Webdunia
புதன், 21 அக்டோபர் 2009 (14:29 IST)
webdunia photo
WD
இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியேற்றுவோம் என்று அளித்த உறுதி மொழியை காப்பாற்றாமல், அவர்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு என்று மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 2,72,000 பேரில், அக்டோபர் 9ஆம் தேதிவரை 27,000 பேரை மட்டுமே விடுவித்துள்ளது சிறிலங்க அரசு என்றும், இன்னமும் 2,45,000 தமிழர்கள் அடிப்படை வசதிகளற்ற அந்த முகாம்களில்தான் அவதியுற்று வருகின்றனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியக் கிளையின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

webdunia photo
WD
“உறுதிகள் அளித்தது போதும், இதற்கு மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதை ஏற்க மாட்டோம். உடனடியாக முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்குமாறு சிறிலங்க அரசின் சர்வதேச நண்பர்கள் அந்நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும ்” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.
போரின் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தல் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த வாக்குறுதிகளை பிராட் ஆடம்ஸ் பட்டியலிட்டுள்ளார ்:

1. இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள 80 விழுக்காடு மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள்குடியமர்த்துவோம் என்று மே 7ஆம் தேதி சிறிலங்க அரசு அளித்து உறுதிமொழி அதன் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.

2. போர் முடிந்ததும் இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம், ஆறு மாத காலத்திற்குள் இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்துவோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார்.

3. ஜூலை 16ஆம் தேதி பன்னாட்டு நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் கடன் பெறும்போது, இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 முதல் 80 விழுக்காடு இடம் பெயர்ந்தோரை முகாம்களில் இருந்து விடுவித்து விடுவோம் என்று சிறிலங்க அரசு உறுதியளித்தது.

4. ஆனால், அக்டோபர் 6ஆம் தேதி துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று சிறிலங்க அமைச்சர் சரத் அம்முனுகாமா கூறினார்.

5. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு இலட்சம் பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று அதற்கான அமைச்சர் ரிஷார்த் பத்தியுதீன் கூறினார்.

எனவே ஒப்புக் கொண்டபடி அனைவரையும் முகாம்களில் இருந்து விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யாமல் 37 விழுக்காட்டினரை மட்டுமே விடுவிக்க முடியும் என்று இப்போது கூறுகிறது சிறிலங்க அரசு.

இதுமட்டுமின்றி, செப்டம்பர் இறுதிவரை 40,000 பேர் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று அது கூறுவது பொய்யானத் தகவலாகும்.

ஐ.நா. அக்டோபர் 9ஆம் தேதி அளித்துள்ள புள்ளி விவரப்படி, இதுநாள்வரை 13,502 பேர் மட்டுமே அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13,336 பேர் அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் சென்று தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்தியாவில் இருந்த முகாம்களை பார்வையிட வந்த நாடாளுமன்றக் குழுவினரிடம் இரண்டு வாரங்களில் 58,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்யப்போவதாக சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

“போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு. தமிழ் மக்களின் நியாயமானக் குறைகளைத் தீர்த்துவைக்காவிடில் அது அந்நாட்டிற்கு பேரழிவாக முடியும ்” என்று பிராட் ஆடம்ஸ் எச்சரித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்கப்பாதைகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தீவிரம்…!

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… இனி மழை எப்படி இருக்கும்?

நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல்… கொட்டித் தீர்த்த மழை!

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Show comments