தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள், அவர்கள் சொல்வதையெல்லாம் டெல்லி அரசு கேட்காது என்று சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியபோது அதனை எதிர்த்து அறிக்கை வெளியிடாத (ஜெயலலிதா தவிர) தலைவர்களே தமிழ்நாட்டில் இல்லை.ஆனால், ஈழத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய் என்று சிறிலங்க அரசிற்கு நெருக்குதல் தருமாறு கடந்த நூறு நாட்களாக தமிழக அரசும், அனைத்துக் கட்சிகளும் விடுத்த கோரிக்கையை கண்டு கொள்ளாதது மட்டுமின்றி, கொழும்பு சென்ற...