நமத ு நாட்டில ் அத ு தல ை கீழா க உள்ளத ு. வெள்ளையர ் காலத்த ு சட்டங்களைத்தான ் நாம ் அவ்வாற ே ஏற்றுக்கொண்ட ு இன்றுவர ை கடைபிடித்த ு வருகிறோம ். காவல்துறைச ் சட்டம ் 1861 தான ் இன்றைக்கும ் நடைமுறையில ் உள்ளது (இதன ை மாற்றும ் முயற்சியும ் நடந்துகொண்டுதான ் இருக்கிறத ு. மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி தலைமையிலான குழு மாதிரி காவல் சட்டம் ஒன்றை வகுத்து மத்திய அரசிடம் அளித்துள்ளது).
வெள்ளையர் ஆட்சியில ் சட்டத்தின ் வாசகங்கள ் பெருமையா க இருக்கும ், நடைமுறையில ் அதற்க ு நேர ் எதிரா ன நடவடிக்கைகள ் நிலவும ். அதாவத ு அதிகாரமளிக்கக்கூடியதா க மட்டும ே அந்தச ் சட்டம ் இருக்கும ், அதன ை தவறா க நடைமுறைப்படுத்தினால ் அதற்கு பொறுப்பேற்கும ் கட்டுப்பாட ு அதிலிருக்காத ு. அதனால ் அடக்குமுறைய ை ஆட்சிக ் கொள்கையா க கடைபிடிக் க காலனி ய காலச ் சட்டங்கள ் மி க வசதியானவ ை. இதன ை மாற்றாமல ் இன்ற ு வர ை நமத ு நாட ு கடைபிடித்துக்கொண்டிருக்கிறத ு உடும்புப்பிடியா க.
காவலர ் என்பவர ் யார ்? அவர ் எப்பட ி நடந்துகொள் ள வேண்டும ்? அவரின ் கடமையென் ன? என்பதையெல்லாம ் ( சர்வதே ச அளவில ்) வரைப்படுத்துகிறத ு காவலர ் நடத்த ை விதிகள ் (Police code of Conduct). 12 விதிகளை குறிப்பிடுகிறது. அதனை இங்கு நாம் குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அதற்கும் நமது காவல் துறைக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது.
கால ் நூற்றாண்டுக ் காலத்திற்கும ் மேலா க நடைமுறையில ் உள் ள இந் த வழிகாட்ட ு நெற ி மூன்ற ு முக்கி ய அம்சங்கள ை காவல ் சேவைக்க ு அடிப்படையா க வலியுறுத்துகிறத ு. குற்றம ் - நீத ி அமைப்பின ் மற் ற அமைப்புக்களைப ் போ ல, “தாங்கள் பாதுகாக்கும் சமூகத்தின் பிரதிநிதிகளாக, அவர்களின் எதிர்பார்ப்பின்படி நடப்பவர்களாக, தங்களின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்பவர்களாக இருந்திடல் வேண்டும ்” என்று கூறியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை இந்திய காவல் துறை இன்றளவில் எடுத்துக்கொண்டால் சற்றும் நெருங்கவில்லை என்பது தெளிவு. அதன் பார்வையும், அணுகுமுறையும், நடவடிக்கைகளும் வெள்ளையர் அளித்த அந்த காலனிய வழியிலேதான் இன்றளவும் நீடிக்கிறது என்பதுதான் வருத்தமான யதார்த்தம்.
காவல் துறையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து லீகல் சர்வீஸ் இந்தியா டாட் காம் என்ற இணைய தளத்தில் ஒரு ஆழமான ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ள திரு. பங்கஜ் பன்சிவால், அறிஞர் பென்சமின் டிஸ்ரேலி குறிப்பிட்ட ஒரு வாசகத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பாதுகாவலர்கள் நாம், அதனை யாரிடமிருந்து பெறுகிறோமோ அந்த மக்களுக்கு, அந்த மக்களுக்காக பயன்படுத்துவது மட்டுமின்றி, அதற்கான பொறுப்பை ஏற்பவர்களாகவும் ஆகிறோம ்” என்று கூறியுள்ளார்.
நமக்கு அதிகாரம் அளிக்கும் அரசு இந்த மக்களால் தேர்வு செய்யப்பட்டது, இவர்கள் அளிக்கும் வரியால் நமக்கு ஊதியம் தரப்படுகிறது, இவர்களில் இருந்து வந்தவர்கள் நாம், அவர்களுக்காகவே, அவர்களின் நலன் காப்பது நமது பணி என்பதைப் புரிந்துகொண்டால், அதனை அவர்கள் பணியில் சேரும்போது ஆழமாக மனதில் பதியுமாறு கற்பிக்கப்பட்டால், அதனையே முகவுரையாகக் கொண்டு நமது நாட்டிற்கு காவல் துறைச் சட்டம் வகுக்கப்பட்டால், நமது நாட்டிலும் ஜனநாயக உரிமைகள் காக்கப்படும், காவல் துறை மீதான வெறுப்புணர்ச்சியும் விடைபெறும்.