Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரையுலகத்தினர் போராட்டம் தொடரவேண்டும்!

Webdunia
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும ்; மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். - இதுவே அண்மையில் தமிழ்த் திரையுலகினர் பாரதிராஜா தலைமையில் இராமேஸ்வரத்தில் குழுமி நடத்திய போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்.

Puthinam PhotoFILE

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்தும ், மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பித்து கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறி இதேபோன்றதொரு போராட்டத்தை சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்திக் காண்பித்தனர்.

சென்னையில் நடைபெற்றது உண்ணாவிரதப் போராட்டம். இராமேஸ்வரத்தில் நடைபெற்றிருப்பது பேரணி - பொதுக்கூட்டம். போராட்டத்தின் தன்மையில்தான் வேறுபாடே தவி ர, முடிவு என்னவோ ஒகேனக்கல் பிரச்சினையைப் போன்றதுதான் எனலாம்.

Puthinam PhotoFILE

உண்மையிலேயே தமிழர்களுக்கு ஏதாவது ஒரு நாட்டில் இன்னல் என்றால ், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் ஒன்று திரள்வார்கள் என்பதை மத்திய அரசுக்கும ், மற்ற நாடுகளுக்கும் இயக்குனர்களும ், தயாரிப்பாளர்களும ், சில நடிகர்களும் இராமேஸ்வரத்தில் கூடி உணர்த்தியிருப்பதை தமிழன் என்ற முறையில் வரவேற்காமல் இருக்க முடியாது.

ஆனால் ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில் மைக்கை ஆளாளுக்கும் தங்கள் சொந்த விருப்ப ு, வெறுப்புகளைத் தீர்ப்பதற்காக பயன்படுத்தியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

பேச வந்த பிரச்சினையை விட்டுவிட்ட ு, எதற்காக குழுமியிருக்கிறோம். யார்- யார் கவனத்தை ஈர்க்கப் போகிறோம் என்பதை மறந்த ு, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே தமிழுணர்வு உள்ளவர்கள் போலவும ், கலந்து கொள்ளாதவர்கள் தமிழ்த் திரையுலகில் மின்னிக் கொண்டிருந்தாலும ், வேற்று மொழிக்காரர்கள் என்பதும் போலவும் சிலர் பேசி தங்களது வெறுப்புகளை வெளிக்கொட்டியதோட ு, மேடையில் எந்த அளவுக்கு தங்களது அறியாமையை வெளிக்காட்ட முடியும் என்பதையும் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு நிரூபித்தனர்.

இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தைப் பொருத்தவரை பல இயக்குனர்கள் ஆவேசமாகப் பேசிய போதிலும ், சீமான ், பாரதிராஜா ஆகியோர் இரத்தினச் சுருக்கமாகப் பேசி தாங்கள் சொல்ல வந்ததை விட்டு வெளியே செல்லாமல் கருத்துகளை மட்டும் பதிவு செய்தனர்.

கவிஞர் வைரமுத்து ஒருபடி மேலேபோய ், ` தற்போது இங்கே கூடியுள்ளோம். கரை கடந்து இலங்கைக்குச் செல்ல வெகுநேரமாகி விடாத ு' என்று மிரட்டல் தொனியில் கூறினார்.

சர ி, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கூடி தங்களது ஒற்றுமையை மத்திய அரசுக்கும ், இலங்கை அரசுக்கும் நிரூபித்து விட்டாகிவிட்டது. இது மட்டுமே போதுமா? இந்தப் பேரணி மட்டுமே அந்த நோக்கத்தை நிறைவேற்றி விடுமா? நிச்சயம் இல்லை.
Puthinam PhotoFILE

இராமேஸ்வரம் பேரணி - பொதுக்கூட்டத்தால் மத்திய அரசுதான் இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டத ா? அல்லது இலங்கை அரசு தமிழ்த் திரையுலகினரின் மிரட்டலுக்குப் பணிந்து தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டத ா? இரண்டுமே இல்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்ட ு, அவற்றின் சாதக பாதகங்களை மசால ா, பாடல்கள ், இசை என தங்கள் ரசனைக்கேற்ப கலந்த ு, முடிவில் யாருமே எதிர்பாராத ஒரு தீர்வைச் சொல்லி முடிப்பதால் திரைப்படம் வேண்டுமானால ்; மக்களுக்கு புதிதாக இருப்பதுடன் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெறுவதுடன் தயாரிப்பாளர ், நடிகர ், நடிகைகள ், இயக்குனர்களுக்கு காசு-பணத்தையும ், புகழையும் பெற்றுத் தரும். ஆனால ், அதுமாதிரியானதல்ல இலங்கைத் தமிழர் பிரச்சினை.

இலங்கை அரசுக்கு நேரடியாகவும ், சில நேரங்களில் மறைமுகமாகவும் ஆயுதங்கள் உட்பட பல்வேறு உதவிகளை அளித்து வரும் மத்திய அரசை உறுதியுடன் எதிர்த்த ு, இலங்கைக்கான ஆதரவை உடனே நிறுத்த வலியுறுத்துவது ஒன்றே தமிழர்களைக் காப்பாற்ற உதவும். அதனை யாரால் செய்ய முடியும ்?

அந்த இடத்தில் இருப்பவர்கள் அதனை உணர்ந்த ு, நாடு சுதந்திரம் அடைவதற்காக மகாத்மா மேற்கொண்ட சத்யாகிரக போராட்டம ், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களை மத்திய அரசைக் கண்டித்து மேற்கொள்ள வேண்டும். அதுபோன்ற போராட்டங்களில் மாநில அரசின் வேண்டுகோளுங்கிணங் க, நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் தங்களுக்குள் உள்ள பாலிடிக்ஸை (அரசியல்) தூக்கி எறிந்து விட்டு கலந்து கொள்ள வேண்டும். (அரசியலில் சில நடிகர்கள் உள்ளனர் என்பது வேறு விஷயம்).

அதுபோன்றதொரு போராட்டம் நடத்தினால் மட்டுமே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.

அதைவிடுத்து கோஷ்டிக்கு ஒரு கூட்டம் என்பது போன்று தமிழ்த் திரையுலகில் உள்ள ஒவ்வொரு குழுவினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க விளைவது எல்லாம் வீணான கூட்டமாகவே அமையும். தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் கூட்டமாக ஒருபோதும் இருக்காது.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments