பேச்சுவார்த்தைகள் தோற்கக் காரணமென்ன? கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பரில் போர் நிறுத்தத்தை முறித்துக்கொள்ளவதாக சிறிலங்க அதிபர் ராஜபக்சே தன்னிச்சையாக அறிவித்தபோது, அதனை எதிர்த்த நாடுகள் அனைத்தும், இலங்கை இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காண்பது சாத்தியமில்லை, பேச்சுவார்த்தையின் மூலம்தான் நீடித்த தீர்வு காண முடியும் என்று கூறின. இந்தியாவும், அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கூட இதைத்தான் தொடர்ந்து கூறிவருகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துவிட்டால் இலங்கை...