இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தமிழக மீனவர் சிறிலங்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளார். சிங்கள கடற்படையினரின் இந்த எல்லை மீறிய, அத்துமீறிய அராஜகம் இராமேஸ்வரம் மீனவர்களை கொதிப்படையச் செய்துள்ளது. தங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி இன்றைக்கு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இராமேஸ்வரம் மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறினால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.கடந்த ஜூலை மாதம்...