Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாதத்தை ஒடுக்க முடியுமா?

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:08 IST)
தலைநகர ் டெல்லியில ் கடந் த சனிக்கிழம ை நடந் த தொடர ் குண்ட ு வெடிப்புத ் தாக்குதல்கள ை அடுத்த ு, பயங்கரவாதத்த ை ஒடுக் க பிரதமர ் தலைமையில ் கூடி ய மத்தி ய அமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல் முன்மொழிந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளத ு.

இந்தியாவின் நகரங்களைக் குறிவைத்து நடத்தப்படும் ‘மெட்ரோ ட ெ‌ ர்ரரிசத்த ை’ எவ்வாறு கட்டுப்படுத்துவது, உள்நாட்டுப் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து தனது திட்டத்தை சிவ்ராஜ் பட்டீல் விளக்கியதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவர் முன்மொழிந்த திட்டம் குறித்து வேறு எதையும் விளக்கவில்லை.

நமது நாட்டின் உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது, மத்திய- மாநில பாதுகாப்பு அமைப்புக்களுக்கிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு, காவல் துறையை பலப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு ஆகியன சிவ்ராஜ் பட்டீல் முன்வைத்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் கூறியுள்ளன.

இ‌ந்தக்கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடுமையான சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், அது குறித்து ஆலோசிப்பதாக பிரதமர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது, கூடுதலாக மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாலேயே நமத ு நாட்ட ை அச்சுறுத்திவரும ் பயங்கரவாதத்திற்க ு முடிவ ு கட்டிவி ட முடியும ் என்ற ு அரச ு உறுதியா க நினைக்குமானால ் அத ு கனவுலகில ் மிதந்துக ் கொண்டிருக்கிறத ு என்ற ே கருதவேண்டும ்.

சட்டத்தினால ் பயங்கரவா த நடவடிக்கைகள ் தடுக்கப்பட்டத ா?

பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கடுமையான தடுப்புச் சட்டம் இயற்றினால் அதற்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்‌க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கூறியுள்ளது. இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள் என்று புரியவில்லை.

2001 வத ு ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் 11 ஆம ் தேத ி நிய ூ யார்க ், பென்சில்வனிய ா ஆகிய இடங்களில் நடத்தப்பட் ட தாக்குதல்கள ை அடுத்த ு, உலகளாவி ய அளவில ் பயங்கரவாதத்த ை ஒடுக்குவத ு பற்ற ி ஆலோசித் த ஐ. ந ா. வின ்
பாதுகாப்புப ் பேரவை, மி க முக்கியமா க இரண்ட ு தீர்மானங்கள ை நிறைவேற்றியத ு. ஒன்ற ு, தீ்ர்மானம ் எண ்: 1369; மற்றொன்ற ு தீர்மானம ் எண ்: 1373 (28.09.2001). இதில ் முதல ் தீர்மானம ், பயங்கரவாதம ் உல க அமைதிக்க ு ஒர ு அச்சுறுத்தல ் என்பத ு ஒருமனதா க ஒப்புக்கொண்ட ு, பயங்கரவா த தாக்குதல்கள ை முறியடிக் க சர்வதே ச அளவில ் ஒத்துழைப்பை வலியுறுத்தியத ு.

இரண்டாவதா க நிறைவேற்றப்பட் ட தீர்மானம ் எண ்: 1373, பயங்கரவாதத்த ை ஒடுக் க ஒவ்வொர ு நாடும ் தனிப்பட் ட முறையிலும ், மற் ற நாடுகளுடன ் ஒன்ற ு சேர்ந்தும ் மேற்கொள் ள வேண்டி ய நடவடிக்கைகள ை பட்டியலிட்ட ு, அதற்க ு ஒருமனதா க ஒப்புதல ் பெற்ற ு நிறைவேற்றியத ு.

எடுத்துக்காட்டா க, 1. பயங்கரவா த நடவடிக்கைகளுக்க ு வரும ் நிதிகள ை முடக்குவத ு;

2. பயங்கரவா த குழுக்களுக்க ு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள ் கிடைப்பதைத ் தடுப்பத ு;

3. பயங்கரவா த தாக்குதல்கள ் தொடர்பா ன ( உளவ ு) விவரங்கள ை மற் ற நாடுகளுக்க ு உடனடியா க அளித்த ு எச்சரிக்க ை செய்வத ு;

4. பயங்கரவா த நடவடிக்கைகளுக்க ு உதவிடும ் நபர்கள ை கைத ு செய்த ு, சட்டத்தின ் முன ் நிறுத்துவத ு மட்டுமின்ற ி, அப்படிப்பட் ட நடவடிக்கைகள ் அதிதீவிரமா ன குற்றச்செயல்களா க உள்நாட்டுச ் சட்டங்களில ் ( திருத்தம ் செய்த ு) சேர்த்த ு, அதற்க ு அதிகபட் ச தண்டன ை அளிக் க வக ை செய்வது ( Ensure that any person who participates in the financing, planning, preparation or perpetration of terrorist acts or in supporting terrorist acts is brought to justice and ensure that, in addition to any other measures against them, such terrorist acts are established as serious criminal offences in domestic laws and regulations and that the punishment duly reflects the seriousness of such terrorist act s) ;

5. பயங்கரவா த நடவடிக்கைகளில ் ஈடுபடுவோர ் நாடுவிட்ட ு நாட ு செல்வத ை முழுமையா க தடுக்கும ் விதத்தில ் பய ண விதிமுறைகள ை கடுமையாக்குவத ு, பய ண ஆவணங்கள ், அடையாளங்கள ் ஆகிய ன தவறா க பயன்படுத்தப்படா த அளவிற்க ு முறைப்படுத்துதல ் ஆகிய ன போன் ற பல்வேற ு தடுப்ப ு நடவடிக்கைகள ை வலியுறுத்த ி இத்தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு.

ப‌ல்வேறு நாடுக‌ளி‌ல் பய‌ங்கரவாத அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் தேச‌த்‌தி‌ற்கு ‌விடு‌க்க‌ப்ப‌ட்ட சவாலாக எடு‌த்து‌க்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு அதிதீவிர நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்பட்டது. அமெ‌ரி‌க்கா‌வி‌ன் Federal Bureau of investigation (FBI) போ‌ன்ற அமை‌‌ப்புக‌ள் பய‌ங்கரவாத‌த்தை ஒடு‌க்குவதை உடனடியான தலையாய கு‌றி‌க்கோளாக எடு‌த்து‌க்கொ‌ண்டு செய‌ல்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. ‌பயங்கரவாதம் தொடர்பான மி‌ன்- அ‌ஞ்ச‌ல் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ல்லா வகையான தகவ‌ல் ப‌‌ரிமா‌ற்ற‌ங்களு‌ம் இ‌ந்த அமை‌ப்புக‌ளி‌ன் கடுமையான க‌ண்கா‌ணி‌ப்‌பி‌ற்கு‌ம் த‌ணி‌க்கை‌க்கு‌ம் உ‌ட்படு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.

இ‌ந்‌தியாவை‌ப் பொறு‌த்தவரை பய‌ங்கரவாத அ‌ச்சுறு‌த்த‌ல்களை மு‌றியடி‌க்கு‌ம் நடவடி‌க்கைக‌ள ், உளவு அமை‌ப்‌புக‌ளி‌ன் மூல‌ம் மா‌நில அரசுகளு‌க்கு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌க்க‌ப்படுவதோடு நி‌ன்று ‌விடு‌கிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான உளவு விவரங்களைப் பரிமாறிக்கொள்வதில் கூட நமது உளவு அமைப்புக்களுக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளதாக ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் பேசும் அளவி்ற்கு நிலைமை உள்ளது.

தடுத்தத ா பொட ா சட்டம ்?

ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலய ே பயங்கரவா த நடவடிக்கைகள ை ஒடுக் க, பயங்கரவா த தடுப்புச ் சட்டத்த ை (Prevention of Terrorism Act - POTA) பாரதி ய ஜனத ா கட்சித ் தலைமையிலா ன தே ச ஜனநாய க முற்போக்குக ் கூட்டண ி அரச ு நாடாளுமன்றத்தின ் இர ு அவைகளின ் கூட்டுக ் கூட்டத்தில ் நிறைவேற்றியத ு.

பொட ா சட்டத்த ை நிறைவேற்றியத ு. அத்தோட ு அமைத ி காத்தத ு. அந்தச ் சட்டம ் தமிழ்நாட ு ( வைக ோ கைத ு செய்யப்பட்ட ு சிறையில ் அடைக்கப்பட்டத ு), உத்திரப்பிரதேசம ் உட்ப ட ப ல மாநிலங்களில ் தவறா க பயன்படுத்தப்பட்டத ு. எந் த பயங்கரவாதியும ் இச்சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்படவில்ல ை. அதனால் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் தடுக்கப்படவில்லை. தங்கள ் அரசியல ் எதிரிகளைப ் பழிவாங் க மாநி ல அரசுகளுக்க ு ஒர ு சட்டக்கருவ ி கிடைத்தது அவ்வளவ ே.

இதனைத ் தவி ர ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவ ை நிறைவேற்றி ய தீர்மானத்தின ் அடிப்படையில ் எந்தவி த தொடர் நடவடிக்கைகளையும ் அந் த அரச ு மேற்கொள்ளவில்ல ை.
அதனால்தான ் அடுத் த சி ல மாதங்களிலேய ே, 2001 ஆம ் ஆண்ட ு, டிசம்பர ் 13 ஆம ் தேத ி இந்தியாவின ் நாடாளுமன்றத்தின ் மீத ு பயங்கரவா த தாக்குதல ் நடந்தத ு. இந்தச ் சட்டம ோ அல்லத ு அத ு சார்ந்த ு நடவடிக்கைகள ோ இப்படிப்பட் ட தாக்குதல்களைத ் தடுக் க முடியாத ு என்பதைய ே நாடாளுமன்றத்தின ் மீத ு நடத்தப்பட் ட தாக்குதல ் உணர்த்தியத ு.

அத்தாக்குதலில ் ஈடுபட் ட பயங்கரவாதிகள ் பாகிஸ்தானியர்கள ், அவர்கள ் அந்நாட்ட ு உளவ ு அமைப்பா ன ஐ. எஸ ்.ஐ. யின ் தூண்டுதலின ் பேரிலேய ே தாக்குதல ் நடத்தினார்கள ் என்ற ு கூற ி, போர ் தொடுக்கும ் முடிவுடன ் படைகள ை நகர்த்தியத ு வாஜ்பாய ் அரச ு. ஆனால ், அத ு இர ு நாடுகளுக்க ு இடைய ே பதற்றத்த ை அதிகரி‌க்கத்தான ் பயன்பட்டத ே தவி ர, எல்லைத ் தாண்டி ய பயங்கரவாதத்திற்க ு முற்றுப்புள்ள ி வைக்கவில்ல ை.

இன்றளவும ் எல்லைத ் தாண்டி ய பயங்கரவாதம ் தொடர்ந்துகொண்டுதான ் இருக்கிறத ு. அதேபோ ல, பயங்கரவா த தாக்குதல்களும ் தொடர்ந்த ு கொண்டுதானிருக்கின்ற ன. பொட ா சட்டத்த ை வைத்துக்கொண்ட ு 2004 ஆம ் ஆண்டுவர ை ஆட்சியிலிருந் த வாஜ்பாய ் அரச ு எந் த அளவிற்க ு பயங்கரவாதத்தைக ் கட்டுப்படுத்தியத ு?

எனவ ே, கடுமையா ன சட்டத்த ை இயற்றிவிடுவதாலேய ே பயங்கரவாதத்த ை ஒடுக்கிவி ட முடியும ் என்ற ு ப ா.ஜ.க. கூறுவதும ், அதைய ே ஒர ு தடுப்ப ு நடவடிக்கையா க இப்போதுள் ள அரச ு கருவதுவதும ் அர்த்தமற்றதாகும ்.

பயங்கரவாதத்த ை ஒடுக் க நாட ு தழுவி ய அளவில ், முழ ு அதிகாரத்துடன ் செயல்படக்கூடி ய புலனாய்வ ு அமைப்ப ு ( பயங்கரவா த நடவடிக்கைகள ை கட்டுப்படுத்துவத ே அதன ் ஒர ு நோக்கம ்) ஒன்ற ை ஏற்படுத் த வேண்டியத ு ( அமெரிக்காவின ் FBI போ ல) மி க அவசியம ் என்ற ு ப ல ஆண்டுக ் காலமா க கூறப்பட்ட ு வருகிறத ு. உள்துற ை அமைச்சகத்தின ் கட்டுப்பாட்டின ் கீழ ் செயல்படக்கூடி ய அப்படிப்பட் ட அமைப்ப ு தேவ ை என்ற ு 8 வத ு நிர்வா க சீர்திருத் த ஆணையம ் (Administrative Reforms commission - ARC) நேற்ற ு மத்தி ய அரசிற்க ு அளித் த பரிந்துரையில ் கூ ட தெரிவித்திருந்தத ு. இதைத்தான ் மத்தி ய அரச ு நிறைவேற்றி ட வேண்டும ்.

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், "த‌ற்போது‌ள் ள உளவ ு அமை‌ப்புக‌ள ், பாதுகா‌ப்ப ு அமை‌ப்புக‌ள ் ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் இடை‌யி‌ல ் உ‌ள் ள ஒரு‌ங்‌கிணை‌ப்ப ை அ‌திக‌ரி‌த்தா‌ல ே பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன நடவடி‌க்கைகள ை வலு‌ப்படு‌த் த முடியு‌ம்" என்று கூறியுள்ளார்.

தற்போதுள்ள உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பதே உண்மை. மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தது. ஒருமுறைதான் நடந்தது. அடுத்த முறை நடக்கவில்லை, நடக்க விடாமல் தடுக்கப்பட்டது.

இந்தியாவில ் மட்டும ் தொடருவதேன ்?

2001 செப்டம்பர ் தாக்குதலிற்குப ் பிறக ு அதிதீவிரமாகச ் செயல்படத ் துவங்கி ய அமெரிக்காவின ் எஃப ். ப ி.ஐ. (Federal Bureau of Investigation - FBI) அப்படிப்பட் ட நடவடிக்கைகள ் ஒன்றுகூ ட மீண்டும ் அமெரிக் க மண்ணில ் ஏற்படாமல ்

தடுத்துவிட்டத ே? உலகளாவி ய அளவில ் பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போரில ் அமெரிக் க உள்ளிட் ட நே ச நாடுகள ் தோற்றிருக்கலாம ், ஆனால ் ஒர ு முற ை தாக்குதல ் நடந் த பிறக ு மீண்டும ் அப்படியொர ு தாக்குதல ் நடைபெறாமல ் தடுத்த ு நிறுத்தியுள்ள ன இந்நாடுகள ்.

நிய ூ யார்க ் தாக்குதல்களுக்குப ் பிறக ு வேறெந் த ஒர ு தாக்குதலும ் இந் த 7 ஆண்டுகளில ் அமெரிக்காவில ் நடைபெறவில்ல ை.

லண்டன ் மெட்ர ோ இரயில ் நிலையங்களில ் நடந் த பயங்கரவா த தாக்குதலிற்குப ் பிறக ு மீண்டும ் அப்படியொர ு தாக்குதல ் நடத் த மேற்கொள்ளப்பட் ட முயற்ச ி முறியடிக்கப்பட்டத ு.

ஸ்பெயின ் தலைநகர ் மாட்ரிட்டில ் இரயில ் நிலையங்களில ் தொடர ் குண்டுவெடிப்ப ு நடந்தத ு. அதன ் பிறக ு எந்தத ் தாக்குதலும ் அங்க ு நடைபெறவில்ல ை.

ரஷ்யாவிற்குள ் ஒர ு முற ை தாக்குதல ் நடந்தத ு. அதன்பிறக ு அடுத் த தாக்குதல ் நடைபெறவில்ல ை.

ஆனால ் நமத ு நாட்டில ்...? வீ ர வசனங்களோட ு எல்லாம ே முடிந்த ு விடுகிறத ு. எனவ ே தாக்குதல்கள ் தொடர்கிறத ு. அப்பாவிகள ் சாகின்றனர ், வீ ர வசனம ் பேசுவோர் மட்டும ே பாதுகாப்பா க இருக்கின்றனர ்.

பயங்கரவாதத்த ை ஒடுக் க தே ச அடையா ள அட்ட ை வழங்கல ், அயல்நாட்டிலிருந்து வரும ் பயணிகள ் மீத ு கண்காணிப்ப ு, எல்லைப ் பாதுகாப்ப ு, தனித் த புலனாய்வ ு அமைப்ப ு, அயல ் நாடுகளில ் இருந்துவரும ் நிதிகளின ் மீதா க கண்காணிப்ப ு, மக்களுக்க ு விழிப்புணர்வ ு ஏற்படுத்த ி, அவர்களின ் ஒத்துழைப்பைப ் பெறல ் என்ற ு எண்ணற் ற ஆலோசனைகள் கூறப்பட்ட ன. ஆனால் அதில் எதுவும் ஏற்கப்படவில்லை.

நமது நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க பலமான இராணுவம் உள்ளது. உள்நாட்டில் உருவாகும் சட்டம் - ஒழுங்கு, குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில காவல்துறை உள்ளது. நிலைமை கைமீறும் நிலையில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் உள்ளன. ஆனால் பயங்கரவாதம்? இது மேற்கூறப்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மிக நவீனமானது, அதி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கவல்லது, தொழில்நுட்ப பலம் பெற்றது, சர்வதேச அளவில் ஒரு அடிப்படை கொள்கையுடன் பலமான செயல்பட்டு வருவது. இதனைத் தடுக்க தற்போதுள்ள நமது பாதுகாப்பு - உளவு அமைப்புக்கள் போதுமானவையல்ல. ஒரு புதிய, தனித்த, தனி அதிகார பலம் கொண்ட, ஒரே பணி இலக்கு கொண்ட தேச அளவிலான புலனாய்வு அமைப்பு அவசியம்.

இதைப்புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க முடியும், இதற்குமேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

இந் த அரசிற்க ு இதையெல்லாம ் ஆழமா க ஆலோசித்த ு நடைமுறைப்படுத் த நேரம்தான ் இல்ல ை.

அதனால ் காயத்திற்க ு முதலுதவ ி செய்வதுபோ ல சி ல நடவடிக்க ை அறிவிப்புக்கள ை வெளியிடுகிறத ு, அவ்வளவுதான ்...

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

ஆளுங்கட்சியினர் துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு..!

Show comments