இந்திய ஜனநாயகம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிற்கு நாடு தழுவிய சர்ச்சையை எழுப்பிய இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, தனது அரசிற்கு நான்காண்டுக் காலமாக வெளியில் இருந்து ஆதரவளித்த இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையுன் மீறி, நடைமுறைப்படுத்த முற்பட்டதால் மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த மன்மோகன் அரசு, ஆட்சியைக் காப்பாற்ற படாத பாடுபட்டு வருகிறது.ஆட்சிக்கு அளித்தவந்த ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று இடதுசாரிகள் கெடு விதித்த அடுத்த கனமே அதுவரை அரசை...