Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் எதிர்காலச் சொத்துக்கள்!

கா. அய்யநாதன்

Webdunia
இந்த உலகின் எதிர்காலம் பாதுகாப்பானதாகவும், வளமானதாகவும், நம்பிக்கையுள்ளதாகவும் இருக்க வேண்டுமெனில் மூன்று விஷயங்களைக் காப்பாற்றியாக வேண்டும்.

webdunia photoFILE
ஒன்று, இப்புவியை வெப்பமடைதலில் இருந்து காப்பது. இதைச் செய்யத் தவறினால், தற்பொழுது ஏற்பட்டுவரும் வானிலை மாற்றம் உலக வாழ்வையே கேள்விக்குறியாக்கிவிடும்.

இரண்டு, உலகளாவிய அளவில் உணவு உற்பத்தியைப் பெருக்குதலும், அழிவிலிருந்து விவசாயத்தைப் பாதுகாத்தலும். உலகின் ஒட்டுமொத்த உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை சமாளிக்க சோளம், கரும்பு உள்ளிட்ட சில பயிர்களில் இருந்து எரிபொருள் தயாரிப்பது அதிகரித்துவருவதால் உணவுப் பொருள் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று ரோமில் கூடிய உலக உணவு மற்றும் வேளாண் அமைப்பு மாநாட்டு கவலை தெரிவித்துள்ளது.

webdunia photoFILE
மூன்றாவதாக, உலகெங்கிலும் - குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் - கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் உடலுழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுவரும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வெப்பமயமாதல் எனும் ஆபத்திலிருந்து இப்புவியைக் காக்க ஜி 8 உள்ளிட்ட முன்னேறிய நாடுகளும், வளர்ந்து வரும் மூன்றாம் உலக நாடுகளும் விழிப்புற்று செயலாற்றத் தொடங்கிவிட்டன. அதேபோல், உணவு உற்பத்தியைப் பெருக்க, அத்துறையில் அதிக முதலீடு செய்வது, உற்பத்தியைப் பெருக்குவது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தவும் உலக நாடுகள் தயாராகிவிட்டன.

ஆனால், கல்வி கற்க வேண்டிய வயதில், மற்ற சிறுவர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடி களைப்புற வேண்டிய சிறுவர்கள், கட்டுமானம், உற்பத்தி, சுரங்கத் தொழில் என்பது போன்ற கடினமான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு இளம் வயதிலேயே இயந்திரங்களாக்கப்பட்டு முடக்கப்படும் நிலைதான் இன்னமும் கண்டு கொள்ளப்படவில்லை.

புவி வெப்பமடைவதால் ஏற்படும் வானிலை மாற்றத்தைத் தடுத்தும், உணவு உற்பத்தியைப் பெருக்கியும் இந்த உலகத்தின் எதிர்காலத்தை யாருக்காக நாம் காப்பாற்ற தீவிரமாக மூயன்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த எதிர்கால சமூகத்தின் ஒரு பகுதி கடும் வறுமையின் காரணமாக சத்துள்ள உணவின்றி, கல்வி மறுக்கப்பட்டு உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டு இயந்திரமாக்கப்பட்டுவரும் அவலம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

உலகம் முழுவதும் 5 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் 16.5 கோடிப் பேர் இப்படிப்பட்ட
webdunia photoFILE
கடுமையான உடலுழைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றும், அவர்களில் 7.4 கோடி சிறுவர்கள், கட்டுமானம், சுரங்கம், உற்பத்தி போன்ற ஆபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ( International Labour Organization - ILO) தெரிவித்துள்ளது.

இந்தியாவில், 2001 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி, 1 கோடியே 28 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. ஆனால், 5 முதல் 14 வயதிற்குட்பட்ட 2 கோடியே 90 லட்சம் சிறுவர் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று யூனிசெஃப் நிறுவனம் கூறியுள்ளது.

உலகின் ஒட்டுமொத்த மக்கட் தொகையை கருத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இது மிக மிக
webdunia photoFILE
சாதாரணமாகத் தோன்றலாம். இன்றைக்கு உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார பின்னடைவும், விவசாயத்தில் நிலவிவரும் உற்பத்திச் சரிவும், தொழில் தேடி கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடிபெயரும் எண்ணிக்கை (இது குறித்து ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது) பெருக்கமும் உருவாக்கப்போகும் பொருளாதார நெருக்கடிகளால் சிறுவர் தொழிலாளர் எண்ணிக்கை பன்மடங்க ு- குறிப்பாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் - உயரும் அபாயம் உள்ளது.

இது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில் வளரும் பருவத்தில் உரிய சத்துணவு இன்றி வாழ்ந்துவரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. தீர்க்க முடியுமா என்ற அளவிற்கு இப்பிரச்சனை ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது.

இப்படி வறுமையின் காரணமாகவும், பொருளாதார பின்தங்கிய நிலையின் காரணமாகவும் போதுமான சத்துணவு கிடைக்காத நிலையில், அவர்கள் சர்வ சாதாரணமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கும் நிலையும் உள்ளது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் இப்படிப்பட்ட நிலைதான் ஏற்பட்டது.

webdunia photoFILE
உணவு பற்றாக்குறை முழுமையாக நிறைவு செய்யப்படாவிட்டால் இந்த நிலை ஆப்ரிக்க, ஆசிய நாடுகளை கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது. அப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் தடுக்க உடனடியாக 10 பில்லியன் டாலர் நிதி தேவை என்று ரோம் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர் தொழிலாளர், சத்துணவு ஆகிய இரண்டு பிரச்சனைகள் மட்டுமின்றி, கல்வியின்மையும் அதிகரித்துவருகிறது. கற்க வேண்டிய வயதில் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் அவர்கள் காலம் முழுவதும் கல்வியற்றவர்களாக வாழும் நிலை ஏற்படுகிறது.

ஒருபக்கம் கற்றோர் விகிதம் அதிகரித்தாலும், கற்க வேண்டிய வயதில் கல்வி மறுக்கப்படும் நிலையும் அதிகரித்துவருகிறது. இளம் வயதில் கல்வி மறுக்கப்படுவதால் அவர்கள் சிந்திக்கும் வயதில் அதற்குறிய திறனை பெறாதவர்களாகவே இருக்கும் நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் இன்றளவும் நிலவுகிறது.

ஆக, உலக அளவில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நிலையை கவனமாக ஆராய்ந்து, பொருளாதார
webdunia photoFILE
ஏற்றத்தாழ்வுகளினால் அவர்களின் உடல், மன ரீதியிலான வளர்ச்சி பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு சத்துள்ள உணவையும், தூய்மையான சூழலையும், உரிய வயதில் கல்வியையும் உறுதி செய்ய வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும்.

ஏனெனில் இன்றைய குழந்தைகளும்,சிறுவர்களுமே நாளை எதிர்கால உலக சொத்துகள். அவர்களைக் காப்பாற்றவேண்டியது உலக நாடுகளின் ஒட்டுமொத்த பொறுப்பாகும்.

( இன்று (ஜூன ் 12) சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினம்)

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments