Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித வாழ்க்கைப் பாதையும்... போதையும்...

-ஆ‌ர். ராஜசேக‌ர்

Webdunia
வியாழன், 5 ஜூன் 2008 (12:10 IST)
webdunia photoWD
கத்திரி வெயில் சுட்டெரிக்கும் கோடையில் பெரும்பாலான மக்கள் விரும்பிப் பருகுவது குளிர் பானங்களைத் தான். ஆனால் 'குடி'மகன்களின் பாரம்பரிய விருப்பம் 'பீர்'... இதன் பேரைக் கேட்டாலே நமது உடலில் மெல்லிய போதை தெரியும் என்று சில 'குடி'மகன்கள் கருத்து தெரிவித்ததை என்னால் மறுக்க முடியவில்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.

' பீர்' குடிமகன்களின் பாரம்பரிய விருப்பம் என்ற மேற்கண்ட வாக்கியத்தில், அந்தப் பாரம்பரியம் என்ற சொல்லை நான் பயன்படுத்தியதற்கு காரணம் உள்ளது. மெல்லிய போதை தரும் பீர் போன்ற வஸ்துகள் மனிதர்களின் வாழ்க்கையுடன் நீ...ண்...ட... நெடுங்காலமாக தொடர்புடைவை என்பதற்கு இந்த கட்டுரையில் ஒரு முக்கிய உதாரணத்தையும் மேற்கோள் காட்டியுள்ளேன்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன் (அதாங்க BC) 3200 ம் ஆண்டிலேயே உற்சாக பானம் குடிக்கும் வழக்கம், உலகின் ஒரு சில நாடுகளில் நடைமுறையில் இருந்துள்ளதாக சமீபத்தில் கிடைத்த அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சரி... உங்கள் வீட்டில் பூலோக உருண்டை அல்லது உலக வரைபடம் இருந்தால் அதில் மெஸபடோனியா நாட்டை கண்டுபிடித்து அங்கே செல்லுங்கள்... என்ன கிடைக்கவில்லையா... தற்போதைய ஈராக் தான் அப்போதைய மெஸபடோனியா... ஒ.கே கண்டுபிடித்து விட்டீர்களா?

சமீபத்தில் ஈராக்கில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பாட்டில் மூடிகளில் தற்போதுள்ள பன்னாட்டு உற்சாக பான கம்பெனிகள் பயன்படுத்தும் குறியீடுகளுக்கு (அதாங்க லோகோ) சவால் விடும் வகையில் சில சின்னங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதிலிருந்து அந்தக் காலத்திலேயே உற்சாக பானங்களை புட்டியில் அடைத்து...

இந்த மூடிகளை கொண்டு மூடி, அருகில் உள்ள பகுதிகளுக்கு மெஸபடோனிய மக்கள் விற்பனை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியை சேர்ந்த டாக்டர் டேவிட் வென்குரோவ் கூறுகையில், "ஈராக்கின் (அப்போதைய மெஸபடோனியா) தெற்கு பகுதியில் உள்ள உருக் ( Uruk) பகுதியில் 5,000 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட களிமண் மூடி போன்ற பொருட்கள் தான் உலகளவில் முதன்முறையாக ஒரே மாதிரி தயாரிக்கப்பட்ட (அதாவது தற்போது லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் உற்சாக பான பாட்டிலின் மூடிகள் போல்) பிராண்டட் பொருட்கள்," என்று கூறியுள்ளார்.

கற்களில் சின்னங்களை (லோகோ) தயார் செய்து களிமண்ணைக் கொண்டு மூடிகள் தயாரித்து அதில் லோகோவை பதித்து உற்சாக பானங்களை களிமண் பொருட்களில் (கிட்டத்தட்ட தற்போதைய கண்ணாடி பாட்டில் போல் வடிவம் கொண்டவை) விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. (இப்போதுள்ள பாட்டில் மூடிகளை திறக்க 'ஓப்பனர்' பயன்படுகிறது... அப்போது எப்படி என்பது மெஸபடோனிய மக்களுக்கே வெளிச்சம்...)

அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இதுபோன்ற களிமண் மூடிகளில் உள்ள சின்னங்களில், மக்கள் ஒன்றாகக் கூடி உற்சாக பானங்களை பருகுவது போலவும், அவர்களில் வளர்ப்புப் பிராணிகள் அருகில் அமர்ந்துள்ளது போலவும் வரையப்பட்டுள்ளது. (தற்போது திறந்தவெளி பாரில் நடக்கும் கேளிக்கை விருந்து போல...). இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், உற்சாக பானங்களை அவர்கள் 'ஸ்டிரா' போன்ற பொருட்களைப் பயன்படுத்தி உறிஞ்சியதுதான்.

இதே போன்ற பிராண்டட் களிமண் மூடிகளைப் பயன்படுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு வகை உணவுப் பொருட்கள், எண்ணெய் வகைகள் மற்றும் லேசாக போதையேற்றும் வஸ்துகளை அருகே உள்ள பகுதிகளிலும் விற்று வருவாய் ஈட்டியுள்ளனராம். அந்தந்த பொருட்களில் உள்ள ஓவியங்கள்/ சின்னத்தைக் கொண்டே அவற்றின் தரத்தை கண்டறிய முடியும் என்பது கூடுதல் தகவல்.

காலங்கள் மாறினாலும் உற்சாக பானம் மீதான மனிதனின் ஆசை மட்டும் மாறவே இல்லை. இதற்கு இந்த செய்தியே நல்ல உதாரணம்....

தமிழகத்தில் பீர் தட்டுப்பாடு
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments