கேரள மாநிலத்திலுள்ள கடம்புழா அம்மன் கோயிலிற்குள் சென்று வழிபட பிரபல பாடகர் ஜேசுதாஸிற்கு அக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்திருப்பது வெட்கத்தையும், வேதனையையும் அளித்துள்ளது.webdunia photoFILE கிறித்தவராகப் பிறந்த ஜேசுதாஸ் மத வேறுபாடு பாராமல் ஏராளமான பக்தி பாடல்களைப் பாடியுள்ளார் என்பது மட்டுமின்றி, பல கோயில்களுக்கும் சென்று பக்தியுடன் வழிபடுபவர். சுவாமி அய்யப்பன் மீது அவர் பாடிய பாடல் ஒன்றை ஒவ்வொரு இரவும் ஒலித்த பின்னரே சபரிமலை அய்யப்பன் கோயில் நடை...