போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது.PIB PhotoPIB இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி...