Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007-ல் தமிழகம்!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (18:19 IST)
ஜனவரி 2 : நடிகர் பிரசாந்த் தனது மனைவி கிரகலட்சுமியை பிரிந்தார். கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருக்கிறது என்று பிரசாந்தும், வரதட்சணை கொடுமை செய்தார் என்று கிரகலட்சுமியும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

பிப்ரவரி 13 : தனது தாயே தன்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றம்சாட்டி நடிகை ப்ரீத்தி வர்மா தலைமறைவானார். பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த அவர் தாயை விட்டு பிரிந்து தனது படங்களை நடித்து முடித்துக் கொடுத்தார்.

பிப்ரவரி 15 : தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கு தூக்கு தண்டனை, 25 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

பிப்ரவரி 17 : 50 ஆயிரம் பெண்களை விபசாரத்தில் தள்ளிய புரோக்கர் கன்னட பிரசாத் கைது செய்யப்பட்டான். நடிகைகள், நடிகர்கள், தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் அவன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது அம்பலமானது.

மார்ச் 6 : சென்னை வடபழனியில் திரைப்பட இயக்குநர் செல்வா படுகொலை செய்யப்பட்டார். அவரது படத்தில் கதாநாயகியாக நடித்து வந்த சங்கீதாவுக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக காவல்துறை சந்தேகப்பட்டது.

மார்ச் 16 : கணவர் முகேஷிடமிருந்து விவாகரத்து கேட்டு நடிகை சரிதா வழக்கு தொடர்ந்தார்.

ஏப்ரல் மாதம ் : கிராமப்புற மாணவர்களும் மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேருவதற்கு வசதியாக நுழைவுத்தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என்று அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று கடந்த ஏப்ரலில் தமிழக அரசு நுழைவுத்தேர்வுவை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.

மே 20 : நடிகர் ஸ்ரீகாந்துக்கும்-வந்தனாவுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில் வந்தனா குடும்பத்தினர் பற்றி வெளிவந்த மோசடி புகார்களை தொடர்ந்து திருமணம் தடைபட்டது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாகி திருமணம் நடந்தது.

மே மாதம் : கல்லூரி மாணவ-மாணவியரின் வசதிக்காக ஷிப்ட் முறையில் இயங்கும் வசதி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த மே மாதம் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ஒரு ஷிப்டும், மதியம் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இன்னொரு ஷிப்டும் நடைமுறைக்கு வந்தன.

ஜூன் 1 : சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மட் அணி வேண்டும் என்பது அமல் படுத்தப்பட்ட நாள்.

ஜூன் 3 : நதிகள் இணைக்கப்பட வேண்டும், மத்தியில் தமிழும் ஆட்சி மொழியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமது நீண்ட நாள் ஆசை என்றும், இதுவே தமது பிறந்த நாள் விருப்பம் என்றும் முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.

ஜூன் 4 : உலகத் தமிழர்களின் எண்ணப் பிரதிபலிப்பாகத் திகழ்ந்துவந்த வெப்உலகம்.காம் இணைய பல்கலைத் தளம், தமிழ்.வெப்துனியா.காம் என்ற பெயருடன் யூனிக்கோடிற்கு மாறி தனது பயணத்தை தொடர்ந்தது.

ஜூன் 5 : சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளதைப் போ ல, அதற்கு மத்திய அரசும் அங்கீகாரம் அளித்து சட்டம் இயற்ற வேண்டும் என்று பிரதமருக்கும ், சட்ட அமைச்சருக்கும் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

ஜூன் 21 : சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர ். எஸ ். எஸ ். அலுவலகத்தில் குண்டு வைத்து 11 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று சென்னை தடா சிறப்பு நீதிமன்றம ் தீர்ப்பு.

ஜூன் 25 : திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிளஸ் 1 மாணவன் திலீபன் குமார் சிசேரியன் ஆபரேஷன் செய்த விவகாரத்தில் மருத்துவ தம்பதி முருகேசன் - காந்திமதி ஆகியோர் ஜூன் 25ம் தேதி கைது செய்யப்பட்டனர். திலீபன் குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தான். அக்டோபர் 31ம் தேதி மருத்துவ தம்பதி முருகேசன் - காந்திமதியின் அங்கீகாரத்தை ஓராண்டு ரத்து செய்து தமிழ்நாடு மருத்துவ பேரவை உத்தரவிட்டது

ஜூன் 26 : மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் சண்முகம் காலமானதை தொடர்ந்து, மதுரை மேற்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த நாள். காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரன், அ.தி.மு.க. வேட்பாளர் செல்லூர் ராஜூ.

ஜூ‌ன் 29 : மதுர ை மேற்க ு சட்டப ் பேரவைத ் தொகுதிக்க ு நடந் த இடைத ் தேர்தலில ் த ி. ம ு.க. தலைமையிலா ன ஜனநாய க முற்போக்குக ் கூட்டணியின ் ஆதரவுடன ் போட்டியிட் ட காங்கிரஸ ் வேட்பாளர ் க ே. எஸ ். க ே. ராஜேந்திரன ் 31,000 வாக்குகள ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்றா‌ர்.

ஜூன் 29 : சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் காரில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஜூலை 2 : பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அமெரிக்க அணுசக்தி போர்க் ப்பல் நிமிட்ஸ ் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தத ு. சென்னை துறைமுகப் பகுதிகளில் தரைப் பகுதியில் இருந்த ு 2 மைல்கள் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

ஜூலை 10 : தென் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்தது தொடர்பாக 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சலைட் தலைவன் சுந்தரமூர்த்தி உட்பட 3 பேர் திருப்பூரில் பிடிபட்டனர்.

ஜூலை மாதம் : தமிழக பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ-மாணவியருக்கும் ஒரே சீரான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரும் முடிவில் தமிழக அரசு இருக்கிறது. இதற்காக கடந்த ஆண்டு முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தங்கள் அறிக்கையை இந்த ஆண்டு ஜூலை மாதம் அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஆகஸ்டு 1 : தமிழகத்தை கதி கலங்க வைத்த பிரபல ரவுடி வெள்ளை ரவியும், அவனது கூட்டாளியும் காவல்துறையினரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஆகஸ்ட் 1 : 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர். இவ்வழக்கில் 167 பேர் மீது குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து முடிந்து, வழக்கில் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தின் தலைவர் எஸ்.ஏ. பாஷா உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளே என்று கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேர ள மக்கள ் ஜனநாய க கட்சித ் தலைவர ் மதான ி விடுதல ை.

ஆகஸ்ட் 3 : தொழிலதிபர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக நடிகை பத்மாவதி கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 7 : இசை அமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா- சுஜாயா விவாகரத்த ு கேட்டு நீதிமன்றத்தில ் மனு தாக்கல் செய்தனர்.

ஆகஸ்ட் 14 : திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில ் பட்டப்பகலில் நடுரோட்டில் இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியனின் சகோதரர்கள் 3 பேர் உட்பட 6 பேர் வெட்டி கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 17 : கம்ப்யூட்டர் பொறியாளர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரி என்று விதவிதமாக கூறி பல பெண்களை ஏமாற்றிய கல்யாண மன்னன் லியாகத் அலிகான் கைது செய்யப்பட்டான்.

அக்டோபர் 10 : மும்பையில் நடந்த கிட்னி மோசடியில் சிக்கிய சென்னை மருத்துவர் ரவிச்சந்திரன் மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். அதில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவருக்கு தொடர்பிருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அக்டோபர் 16 : தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவ-மாணவியர்கள் வயது வரம்பின்றி பள்ளி வளாகங்களுக்குள் செல்பேசி கொண்டு வருவதை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அக்டோபர் 24 : கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷாவுக்கு ஆயுள் தண்டைனயும ், அச்சாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபத ி தீர்ப்பளித்தார்.

அக்டோபர் 29 : நைஜீரிய நாட்டில் உள்ள துறைமுகப் பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் உட்பட 4 இந்தியர்களை அங்குள்ள தீவிரவாத இயக்கம் கடத்தல்.

நவம்பர் 1 : தமிழ்நாட்டில் மேற்குப் பகுதி மாவட்டங்களில் உள்ள இரயில் பாதைகளை நிர்வகிக்கும் சேலம் ரயில் கோட்டத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முன்னிலையில் முதலமைச்சர் கருணாநிதி துவக்கி வைத்தார்.

நவம்பர் 2 : திரைப்பட உலகின் முடிசூடா மன்னாகத் திகழ்ந்த அமரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் காலமானார்.

நவம்பர் 14 : மருத்துவம் படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளும் மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தலா 4 மாதங்கள் வீதம் ஓராண்டு பணிபுரிய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி அறிவித்தையடுத்து மருத்துவ மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

நவம்பர் 20 : கணவரின் 2வது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று நடிகை காவேரி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒளிப்பதிவாளர் வைத்தியின் வீட்டில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து வைத்தியின் 2வது திருமணம் நடைபெறவில்லை.

நவம்பர் 21 : இதய நோயால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய 17 தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

நவம்பர் 23 : பெரம்பலூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரியலூர் மாவட்டம் புதிதாக உதயமாகிறத ு'' என்று தமிழக அரசு அறிவிப்பு.

நவம்பர் 30 : ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து திருப்பூர், ஈரோடு ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்ப ு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.

டிசம்பர் 20 : தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான அ.இ.அ.தி.மு.க.வினர் 3 பேருக்கும் ஜனவரி 10ஆம் தேதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென்று சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றநீதிபதி மாணிக்கம் உத்தரவு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்