Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு சலுகை உரியவர்களுக்கு சேருவதில்லை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (13:43 IST)
தமிழக அரசு குறைந்த விலையில் வழங்கும் ரேசன் அரிசியை வாங்கி அரைத்து தண்ணீரில் கலக்கி கால்நடைகளுக்கு கொடுக்கும் பரிதாப நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதேபோல் பெரும் நிலக்கிழார்களுக்கும் இலவச வண்ணதொலைக்காட்சி மற்றும் கேஸ் அடுப்புகள் வழங்குவதால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் ரேசன் அரிசி கிலோ ரூ.2 க்கு வழங்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி பதவியேற்றவுடன் ரேசன் அரிசி கிலோ ரூ.2 க்கு வழங்கும் அரசு ஆணையில் கையொப்பம் இட்டார். இது ஏழை மக்களுக்கு பயன்னுள்ள திட்டம் என்றபோதிலும் இதை ஏழை மக்கள் முழுமையாக பயன்படுத்துகிறார்களா என்றால் அதற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தமிழக அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டையில் சர்க்கரை, அரிசி, மண்ணெண்ணை என எதுவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் வசதிபடைத்தவர்களுக்கு அரிசி வழங்குவதில்லை. ஆகவே ஒரு ரேசன் கடைக்கு எத்தனை கிலோ அரிசி வேண்டும் என கணக்கிட்டுத்தான் அனுப்பப்படுகிறது. இதிலும் அரிசியை கடத்துகிறார்கள் என்றால் தேவைப்படுபவர்கள் அரிசியை வாங்கவில்லை என்றுதான் அர்த்தம்.

ரேசன் அரிசி டன் கணக்கில் கடத்தும் நிலையில் இதுவரை தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட ரேசன் அரிசி கிடைக்கவில்லை என மக்கள் போராட்டம் நடந்துள்ளதா என்றால் கிடையாது. மக்களுக்கு போதிய அளவில் ரேசன் அரிசி கிடைத்திருந்தால் டன் கணக்கில் கடத்துவதற்கு எப்படி அரிசி கிடைக்கும். அப்படியெனில் தங்கள் குடும்ப அட்டையில் ரேசன் அரிசி வேண்டும் என குறிப்பிட்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் ரேசன் அரிசி வாங்குவதில்லை.

தமிழகத்தில் தற்போது ரேசன் அரிசி வாங்குபவர்களில் பலர் தங்கள் கால்நடைகளுக்கு அரைத்து சத்துமாவாக வழங்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் ரேசன் அரிசியை முறைக்கேடாக பயன்படுத்துவதால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என ஒவ்வொரு குடிமகனும் நினைக்கவேண்டும்.

தற்போது ஏழை மக்களுக்காக கொண்டு வந்த ரேசன் அரிசியை ஏழை மக்கள் வாங்குவதில்லை. காரணம் அவர்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டுள்ளது என்பதுதான் உண்மை நிலையாகும்.

இதேபோல் தற்போது அரசு இலவசமாக வழங்கும் வண்ணதொலைக்காட்சி பெட்டிகள் பெரும்பாலும் பணக்காரர்களுக்குத்தான் சென்றடைகிறது. பத்து ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளவனுக்கு இலவச வண்ணதொலைக்காட்சி பெட்டி கிடைத்துள்ளது. அதேபோல் பெரும்பாலான இடங்களில் பாமர ஏழைகளுக்கு கிடைக்கவில்லை. இதற்கு காரணம் கணக்கெடுக்கும் கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.100 முதல் 500 வரை லஞ்சம் கொடுத்து தங்கள் பெயர்களை இலவச வண்ணதொலைக்காட்சி பெட்டி வாங்க சேர்த்துவிடுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல் பெரும் வசதியுள்ள மக்களுக்கே இலவச சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு ஆகியவை கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு சிலிண்டர்கள் கொண்டவர்களுக்கு இலவச சிலிண்டரும் வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்பாண்மையான இடத்தில் நடந்துள்ளது.

இதேபோல் பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலை அனைவருக்குமே கிடைக்கிறது என்றால் அது மிகையாகாது. பொதுவாக பொதுமக்களிடம் தங்களுடைய தகுதிக்கு எது தேவைப்படுகிறதோ அதைமட்டும் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வளரவேண்டும்.

அல்லது அரசாங்கம் தகுதியுடையவர்களுக்கு மட்டும் இலவச பொருட்கள் மற்றும் சலுகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையேல் பல ஆ‌க்க‌ப்பூ‌ர்மா ன திட்டங்களுக்கு பயன்பெறும் அரசு பணம் வீணாவதை யாரும் தடுக்க முடியாது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

120+ உயிர்பலிகள்; கைது நடவடிக்கையில் தாமதம்! தப்பி தலைமறைவான போலா பாபா! – போலீஸார் தேடுதல் வேட்டை!

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் சிறை தண்டனை ரத்து.! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.!

நீட் விவகாரத்தில் போலி பிம்பம் உடைந்துவிடும் என்ற பயமா.? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி..!!

தமிழகத்தில் 3 முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அண்ணாமலை கடும் விமர்சனம்..!

Show comments