பிரிட்டிஷ் கப்பல் குழுமத்தின் கொட்டத்தை அடக்க எண்ணித் தூத்துக்குடி இந்திய வணிகர்களின் ஆதரவுடன் 1906 ஆம் ஆண்டில் சுதேசிக் கப்பல் குழுமம் ஒன்றை வ.உ. ச ி. தொடங்கினார ். சுதேசிக் கப்பல் குழுமம ் 1882 ஆம் ஆண்டின் இந்தியக் குழுமச் சட்டப்பட ி 16.10.1906 அன்று பதிவு செய்யப்பட்டத ு. பங்கு ஒன்றிற்கு ர ூ.25 வீதம ் 40,000 பங்குதாரர்களிடம ் 10 லட் சம ் ரூபாய் சேர்ப்பதென திட்டமிடப்பட்டத ு. பாலவனத்தம் ஜமீன்தாரும் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவருமாகிய ப ொ. பாண்டித்துரைசாமி தேவர் குழுமத்தின் தலைவராகவும ், வ.உ. ச ி. செயலாளராகவும் பொறுப்பேற்றனர ். சேலம் ச ி. விஜயராகவாச்சாரியார ், எம ்.. கிருட்டிணன் நாயர் உள்ப ட 4 வழக்கறிஞர்கள் குழுமத்தின் சட்ட கருத்துரையாளராக அமர்த்தப்பட்டனர ்.
குழுமம் பதிவு செய்யப்பட்டதும் பங்குதாரர்களைச் சேர்க்கும் வேலை தொடங்கியத ு. ஜனாப் ஷாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் மட்டும ் 8,000 பங்குகளுக்குரிய ரூபாய ் 2 லட்சத்தைக் குழுமத்திற்குச் செலுத்தினார ். இந்த இரண்டு இலட்சம்தான் குழுமத்தைத் தொடங்க மூலதனமாக அமைந்தத ு.
தொடக்கத்தில் சுதேசிக் கப்பல் குழுமம் சொந்தத்தில் கப்பல்கள் வாங்கவில்ல ை. ஷா லைன் ஸ்டீமர்ஸ் குழுமத்திடம் குத்தகைக்குக் கப்பல்களை வாங்கி ஓட்டினர ். பிரிட்டிஷ் கப்பல் குழுமத்தினர் அந்தக் குழுமத்தை மிரட்டியதோட ு, பல்வேறு வகையில் தொடர்ந்து சுதேசிக் கப்பல் குழுமத்திற்கு இடையூறு செய்தனர ். அதனால் சொந்தமாகக் கப்பல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார் வ.உ. ச ி.. அதற்காக பம்பாய ், கொல்கட்டா முதலிய இடங்களுக்குச் சென்று பொருள் திரட்டினார ்.
சில மாதங்களுக்குப் பிறகு காலியா என்ற கப்பலுடன் தூத்துக்குடி துறைமுகம் வந்து சேர்ந்தார் வ.உ. சிதம்பரம் பிள்ள ை. பிரான்சிற்குச் சென்று லாவோ என்ற கப்பலை வாங்கி வந்தார் எஸ ். வேதமூர்த்த ி. இரண்டு கப்பல்கள் வாங்கிய அதே காலகட்டத்தில் இரண்டு இயந்திரப் படகுகளும் வாங்கப்பட்ட ன.