Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணு சக்தி : தேச நலன் முடிவு செய்யட்டும்!

Webdunia
திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (16:28 IST)
PTI PhotoPTI
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை தங்களால் ஏற்க முடியாது என்றும், அது தொடர்பாக அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், மீறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியிருப்பது மத்திய அரசிற்கு அரசியல் ரீதியான நெருக்கடியை உருவாக்கியுள்ளது!

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு நமது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவையைக் கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதமரும், நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற இந்த ஒத்துழைப்பு அவசியமானது என்று நமது விஞ்ஞான சமூகமும் உறுதியாகக் கூறிவிட்ட நிலையில், சற்றேறக்குறைய இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி அதனை நடைமுறைப்படுத்துவதற்கான 123 ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசிற்கு இப்படிப்பட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

PIB PhotoPIB
மத்திய அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கூட்டணிக் கட்சிகள், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை எதிர்ப்பதற்கு கூறிவரும் காரணங்கள் அனைத்தும் பிரதமர் மட்டுமின்றி, அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கரும் விளக்கமளித்துள்ளனர். நாளை நாடாளுமன்றத்தில் விதி எண் 193ன் கீழ் விவாதம் நடந்த பிறகு இறுதியாக மீண்டும் பிரதமர் விளக்கம் அளிக்க உள்ளார்.

ஆனால், அதுவரையெல்லாம் காத்திருக்காமல், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும், மீறினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிரட்டியிருப்பது, கொள்கை ரீதியான கண்மூடித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது.

" நாங்கள் மார்க்சிஸ்ட்டுகள், எங்களால் ஏகாதிபத்திய அமெரிக்காவுடனான எந்தவித ஒப்பந்தத்தையும் ஜீரணிக்க முடியாது" என்றுதான் இவர்கள் சொல்லாமல் சொல்லியுள்ளார்கள். இவர்களுடைய நிலைப்பாட்டில் இந்த நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைக்கான கேள்விக்கு பதில் இல்லை. இருந்திருந்தால் நிச்சயம் அதனை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்திருப்பார்கள். இப்படி அரசியல் தலைமைக் குழுவைக் கூட்டி விவாதித்து தான்தோன்றித்தனமாக முடிவெடுத்திருக்க மாட்டார்கள்.

தங்களுடை ய ஏகாதிபத்தி ய எதிர்ப்ப ை கைவி ட முடியாமல ், பழை ய கொள்க ை பாரம்பரியத்தில ் சிக்கித ் தவித்துக ் கொண்டிருக்கும ் மார்க்சிஸ்ட்டுகள ் ஒன்ற ை உணரவேண்டும ். கம்யூனிஸ்ட ் நாடா ன சீன ா, தனத ு எரிசக்தித ் தேவைக்கா க இன்றல் ல, நேற்றல் ல 22 ஆண்டுகளுக்க ு முன்னர ே, 1985 ஆம ் ஆண்ட ு அமெரிக்காவுடன ் இதேபோ ல 123 ஒப்பந்தத்தில ் கையெழுத்திட்ட ு தனத ு அண ு உலைகளுக்க ு எரிபொருளைப ் பெற்ற ு வருகிறத ு. அந்நாட்டின ் கம்யூனிஸ்ட்டுகளுக்க ு தங்கள ் நாட்டின ் தேவைகளுக்க ு என் ன செய்வத ு என்பத ு புரிந்திருக்கிறத ு. ஏனென்றால ் அவர்கள ் அங்க ு ஆட்சியில ் இருக்கின்றார்கள ். எனவ ே, கொள்கையைத ் தாண்ட ி பொறுப்புணர்வுடன ் திட்டமிடுகிறார்கள ்.

இந் த அண ு சக்த ி ஒத்துழைப்பினால ் இந்தியாவ ை வளைக்கப ் பார்க்கிறத ு அமெரிக்க ா என் ற மார்க்சிஸ்ட்டுகளின ் கூற்றுப்பட ி பார்த்தால ், 22 ஆண்டுகளுக்க ு முன்னர ் அண ு ஒத்துழைப்ப ு செய்த ு கொண் ட சீன ா எந்தவிதத்திலும ் அமெரிக்காவிற்க ு அடிபணிந்ததாகத ் தெரியவில்ல ை. இப்படிப்பட ் நிலையில ் இந்தியாவ ை தன ் வசதிக்க ு அமெரிக்க ா வளைக்கும ் என்ற ு மார்க்சிஸ்ட்டுகள ் கூறுவத ு எந்தவிதத்திலும ் ஏற்றுக்கொள்ளத்ததக்கா த இல்ல ை.

நமத ு நாட்ட ு கம்யூனிஸ்ட்டுகளுக்க ு இரண்ட ு மாநிலங்களைத ் தாண்ட ி எந்தப ் பொறுப்பும ் இல்ல ை. அங்குள் ள செல்வாக்கைப ் பயன்டுத்த ி தற்பொழுத ு மத்தி ய அரச ை மிரட்டுகின்றனர ். மேற்க ு வங் க முதலமைச்சர ் முதலாளித்து வ எதிர்ப்பையெல்லாம ் தூரத்தில ் தூக்க ி வைத்துவிட்ட ு டாட்டாக்களுக்க ு இடமளித்த ு தொழில்துறைய ை முன்னேற் ற விரும்புகிறார ். ஆனால ், இந்தப ் பார்வ ை அந்தக ் கட்சிகளின ் அகி ல இந்தியத ் தலைமைகளுக்க ு இல்லாமல ் போனதுதான ் துரதிருஷ்டவசமானத ு.

webdunia photoFILE
அமெரிக்காவுடனா ன அண ு சக்த ி ஒப்பந்தம ் நாம ் மேற்கொண்டுவரும ் 3 கட் ட அண ு சக்தித ் திட்டத்திற்க ு எந்தவிதத்திலும ் தடையா க இல்ல ை என்றும ், நமத ு எதிர்கா ல பாதுகாப்பைக ் கருத்தில ் கொண்ட ு அண ு ஆயுதச ் சோதன ை நடத்துவதற்க ு தடையா க இருக் க முடியாத ு என்றும ் அண ு சக்த ி ஆணையத்தின ் தலைவர ் அனில ் ககோட்கர ் நேற்ற ு முன்தினம ் கூ ட தெளிவாகக ் கூறியிருந்தார ்.

அதுமட்டுமின்ற ி, ஒர ு வேள ை நமத ு தேசத்தின ் பாதுகாப்பிற்க ு அச்சுறுத்தல ் ஏற்பட்ட ு அதன ் அடிப்படையில ் நாம ் அண ு ஆயுதச ் சோதன ை நடத்தினாலும ் கூ ட, அண ு சக்த ி ஒத்துழைப்ப ை முறித்துக ் கொள்வதற்க ு முன ் அத ு தொடர்பா க இர ு நாடுகளுக்கும ் இடைய ே பேச்சுவார்த்தையும ், அப்படிப்பட் ட சோதனைக்கா ன சூழ்நிலைகளும ் ஆராயப்படும ் என்ற ு 123 ஒப்பந்தத்தில ் தெளிவுபடுத்தப ் பட்டிருப்பதையும ் ககோட்கர ் சுட்டிக ் காட்டியுள்ளார ். இதையெல்லாம ் மார்க்சிஸ்ட்டுகள ் கண்டுகொள்ளவில்ல ை.

நமது அயலுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் தலையீடு அதிகரிக்கும் என்றும், அமெரிக்க வகுத்துவரும் உலகளாவிய ராணுவ திட்டத்தில் நம்மை வலிமையாக இணைக்கவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா முயற்சிக்கிறது என்றும், அடிப்படையற்ற வாதங்களை மார்க்சிஸ்ட் கட்சிகள் முன்வைக்கின்றன.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கட்டுரையில் ஒன்றைத் தெளிவுபடுத்தியிருந்தோம். அணு சக்தித் தேவைக்காக சர்வதேச அளவில் எரிபொருளைத் திரட்ட நமக்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது. அதேபோல, சர்வதேச அரசியல் மற்றும் வணிக ரீதியில் அமெரிக்காவிற்கு இந்தியா தேவைப்படுகிறது என்று கூறியிருந்தோம். இதனால்தான் இந்த ஒப்பந்தம் இருதரப்பிற்கும் சாதகமானது என்றும், எந்தவிதத்திலும் ஒரு வழிப்பாதையாகாது என்று பிரதமரும் விளக்கியிருக்கிறார்.

அமெரிக்காவிடம் இருந்து மட்டுமல்ல, நமது நட்பு நாடாக இருந்துவரும் ரஷ்யாவிடம் இருந்து கூட அணு எரிபொருளையும், உயர் தொழில்நுட்பத்தையும் பெறவேண்டுமெனில் அதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது என்று இந்தியாவிற்கு ரஷ்யா வலியுறுத்தியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆஸ்ட்ரேலியாவில் இருந்து எரிபொருளையும், என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணு உயர் தொழில்நுட்ப உபகரணங்களை விற்கவல்ல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவும் இந்த ஒப்பந்தம் அவசியமானது. எனவே, அடிப்படையில் இருதரப்பு ஒப்பந்தமாக இருந்தாலும், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் நமது தேவைகளுக்கான முக்கிய திறவாகும். இதையெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிகள் கணக்கிலும் எடுத்துக்கொள்ளவில்லை, கருத்திலும் கொள்ளவில்லை. அவர்களுடைய கண்களை கண்மூடித்தனமான கொள்கைப் பிடிப்பு மறைத்துவிட்டதாகவே தெரிகிறது.

இப்பிரச்சனையில் தேசத்தின் நலன் கருதி மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். ஆட்சிக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்தாலும் சரி, அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் இருந்து மத்திய அரசு பின்வாங்கக் கூடாது.

ஏனெனில், இன்னும் 20 ஆண்டுகளில் நமது எரிசக்தித் தேவை பன்மடங்கு அதிகரிக்கக்கூடிய நிலையில், அணு மின் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, அணு மின் உற்பத்தியை பெருக்கவும் அத்தியாவசியமானது சர்வதேச ஒத்துழைப்பு. அதற்கு வழி செய்யும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை எந்த எதிர்ப்பானாலும் அதனை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு ஏற்க வேண்டும்.

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

Show comments