Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈராக் போர் : விடுதலைக்காக அல்ல!

Webdunia
" கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்குத்தான்" என்றொரு பழமொழி உண்டு.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூட கெட்டிக்காரர்தான். ஆனால் அவர் அமெரிக்காவிற்கும ், உலக மக்களுக்கும் கூறிய ஒரு பெரும் பொய் ஒரு வாரம் கூட தாங்கவில்லை.

அதிபர் சதாம் ஹுசேனிடமிருந்து ஈராக் மக்களை விடுவிக்கவே அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் துவங்கியதாக ஜார்ஜ் புஷ் கூறினார்.

நாட்டை விட்டு வெளியேற சதாம் ஹுசேனுக்கும் அவருடைய மகன்களுக்கும் 48 மணி நேர கெடு கொடுத்து அது முடிந்த 1 1 /2 மணி நேரத்தில் - இந்திய நேரப்படி கடந்த 20 ஆம் தேதி காலை 8 மணிக்கு - பாரசீக வளைகுடாவில் தயாராக நின்ற அமெரிக்க போர்க்கப்பல்களில் இருந்து சரமாரியாக செலுத்தப்பட்ட ஏவுகணைகள் சதாம் ஹுசேன் பாதுகாப்பாக தங்கியிருப்பதாகக் கூறப்படும் மாளிகையை தாக்கத் துவங்கியதும் தொலைக்காட்சி வாயிலாக அமெரிக்க மக்களுக்கு (அமெரிக்கா என்றாலே உலகம் தான ே?) உணர்ச்சிகரமாக போர் முழக்கம் இட்டபோது ஜார்ஜ் புஷ் இவ்வாறு கூறினார்.

மானுடத்திற்கு பெரும் கேட்டையும ், பேரழிவையும் தரும் பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுசேன் குவித்து வைத்துள்ளார். அவைகளை அப்பாவி மக்கள் மீது (அதாவது அமெரிக்க மக்கள் மீது) ஏவுவதற்குள் அதனை அழித்துவிடவேண்டும். அதற்கு யாருடைய அனுமதியையும் எதிர்பார்த்து அமெரிக்கா காத்திருக்காது என்று கூறிவிட்டு - ஐ.நா.வை புறக்கணித்துவிட்டு - தனது ஆத்ம நண்பர் டோனி பிளேருடன் இணைந்து போர் தொடுக்க கெடு விதித்தார் ஜார்ஜ் புஷ்.

ஆனால் 48 மணி நேர கெடு முடிவதற்குள் அவர் மனதில் ஏற்பட்ட மாபெரும் மனித நேய மாற்றம்தான் ஈராக் மக்களை சதாமிடமிருந்து விடுவிக்கவேண்டும் என்ற "உறுதியாகும்".

உலக மக்களும ், ஏன் உலக நாடுகளும்தான் நம்பின. (வேறு வழ ி, அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியுமா என் ன?)

டோமஹாக ், ஏஜிஸ் என நூற்றுக்கணக்கான குரூஸ் ஏவுகணைகள் செலுத்தி சதாம் ஹுசேன் மாளிகையையும ், பாக்தாத் நகரையும் அதிரச் செய்தது அமெரிக்கா.

மறுநாள ், 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று "அதிர்ச்சியும் ஆச்சரியமும்" என்ற பெயரில் 24 மணி நேர தாக்குதல் நடத்திய அமெரிக்க - பிரிட்டிஷ் படைகள ், ஈராக் மீது 1,500 ஏவுகணைகளையும ், சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டதாக கூறின.

சதாமை அழிக்க வேண்டும் அல்லவ ா? அப்பொழுதுதானே ஈராக் மக்களை விடுவிக்க முடியும ்? எனவே உலகம் அமைதியாக - ஓரிரு கண்டன அறிக்கைகளை மட்டும் கொடுத்துவிட்டு - வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

" சதாம் ஹுசேன் அழிந்தார்! அவருடைய மகன்கள் கொல்லப்பட்டனர்!! ஈராக் மக்களுக்கு விடுதலை!!! என்று வின்னதிர அமெரிக்கா முழக்கமிடும் என்று எதிர்பார்த்தனர். ஈராக் மக்கள் சதாமின் அழிவை பாக்தாத் தெருக்களில் கொண்டாடுவார்கள் என்று உலகமும் எதிர்பார்த்தது.

ஆனால் எதுவும் நடக்கவில்லை. சதாம் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார்.

24 மணி நேர அதிரடி ஏவுகணை - குண்டு வீச்சு தாக்குதலையடுத்து அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள் தெற்கு ஈராக்கிற்குள் புகுந்தன.

எந்தவித எதிர்ப்பும் இன்றி கூட்டணிப் படைகள் படுவேகத்தில் பாக்தாத் நோக்கி முன்னேறி வருவதாக செய்திகள் கூறின.

உம் காசர் விழுந்தது!
பாஸ்ரா நகரை பிரிட்டன் படைகள் கைப்பற்றின!
நசீரியாவைக் கடந்து அமெரிக்கப் படைகள் முன்னேறின!

என்று சி.என்.என். மற்றும் பி.பி.சி. தொலைக்காட்சிகள் நேரடியாக தாங்கள் பிடித்ததை ஒளிபரப்பின! வரைபடம் (மேப்) போட்டு விளக்கியும் காட்டின. நமக்குப் புரியவேண்டுமல்லவ ா?

பாக்தாத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் - அதாவது 50 மைல் தூரத்திற்கு கூட்டணிப் படைகள் நெருங்கி விட்டதாக அமெரிக்க தளபதி கூறினார்.

இதெல்லாம் முதல் 3 நாட்கள் வரை நம் மூளையை நிறைத்த செய்தி அலறல்கள்!

ஆனால ், இவ்வளவு பெரிய வெற்றியை கொண்டாட மக்களைக் காணோம். சரணடைந்தவர்களை (!) தவி ர, வேறு யாரும் (தொலைக்காட்சியில்) தென்படவில்லை.

கூட்டணிப் படைகளின் வெற்றியை கொண்டாட வேண்டிய மக்கள் எங்கு போய்விட்டார்கள ்? என்று கேள்வி எழுந்தது. ஆனால் பதில் எழவில்லை.

நான்காவது நாளில் இருந்து செய்திகள் மாறி ஒலிக்கத் தொடங்கின!

பாஸ்ர ா, உம் காசர ், நசீரிய ா, நஜாஃப் என்று எதையெலலாம் கைப்பற்றிவிட்ட ு, பாக்தாத்தை நோக்கி நடந்து கொண்டிருப்பதாக கூறினார்கள ோ, அங்கெல்லாம் கடும் போர் நடந்து வருவதாக மாற்றிக் கூறினார்கள்.

அடுத்த நாள்... இரு தரப்பினருக்கும் இடையே கடும் போர் என்றும ், கூட்டணிப் படைகள் எதிர்பாராத அளவிற்கு ஈராக் ராணுவத்தின் - சதாம் ஹுசேனின் மகன் தலைமையிலான குடியரசு பாதுகாப்பு (ரிபப்ளிகன் கார்ட்ஸ்) பிரிவினர் - கடுமையாக போரிடுகிறார்கள் என்று செய்திகள் வரத்தொடங்கின.

அதுமட்டுமல் ல, கூட்டணிப் படையின் மீது ஈராக் படைகள் கெரில்லா தாக்குதல் நடத்தி வருவதாகவும ், அதனால் கூட்டணிப் படையினரின் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன.

அப்பொழுதும் சதாம் பிடியிலிருந்து தங்களை விடுவிக்க வந்த ஆபத்பாந்தவர்களுக்கு ஆதரவாக ஈராக் மக்கள் உதவ வந்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

என்ன இத ு? ஈராக் மக்கள் விடுதலையை விரும்பவில்லைய ா? என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு பதிலும் வந்தது. கூட்டணிப் படைகளோடு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பாஸ்ரா நகரில் இருந்து வெளியேறும் மக்களிடம் பேட்டி கண்டனர்.

அமெரிக்காவிற்கு எதிராக பொரிந்து தள்ளிய அம்மக்கள் - வடிகட்டிதான் காட்டினார்கள் - சதாம் ஹுசேனுக்கு ஆதரவாகத்தான் தாங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.

தங்களை விடுவிப்பதாகக் கூறிவிட்டு தங்கள் மீதே குண்டுகளை போடும் அமெரிக்க - பிரிட்டிஷ் அரசுகளை கடுமையாக விமர்சித்தனர்.

" எங்கள் தலையெழுத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அந்த கவலை அமெரிக்காவிற்கு வேண்டாம்" என்று நடு வயது பெண்மணி ஒருவர் காட்டமாகக் கூறினார்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி ஆதாயம் தேடுவது போ ல, உள்நோக்கத்தை வெளிக்கூறாமல ், வேறு ஒரு காரணத்தைக் கூறி சண்டை போடுவது என்பது உலகம் கண்டிராத விஷயமா என் ன?

எண்ணெய்க்காகவும ், மத்திய ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தவுமே இந்த போர் என்பது மக்களுக்குத் தெரியாத ா?

இதற்குப்போய் பேரழிவு ஆயுதங்களை அழிக்கப் போகிறேன ், ஈராக் மக்களை விடுவிக்கப் போகிறேன் என்று பொய் கூறி போர் தொடுப்பது ஏன் புஷ் அவர்கள ே?

போரால் பொய்யை உண்மையாக்க முயன்றீர். முடியவில்லை.

உண்மை பீஷ்மரைப் போன்றது. சாகாவரம் பெற்றது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

Show comments