Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டணக் குறைப்பு எனும் கண்துடைப்பு!

Webdunia
இலவச அழைப்புக்களின் எண்ணிக்கை குறைத்தும ், அழைப்புக் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியும ், செல்பேசிகளுக்கு செய்யப்படும் அழைப்பு நேர அளவை குறைத்தும் சாதாரண தொலைபேசி பயனீட்டாளர்களின் தலையில் கடும் சுமையை ஏற்றிய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நாடு முழுவதும் ஏற்பட்ட கடும் எதிர்ப்பினை மழுங்கடிக்க இலவச அழைப்புகளின் எண்ணிக்கையை ஓரளவிற்கு உயர்த்தி கண்துடைப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளது.

மாதம் ஒன்றிற்கு அளிக்கப்பட்டு வந்த 75 இலவச அழைப்புகளின் எண்ணிக்கையை 30 ஆக குறைத்த பி.எஸ்.என்.எல்., அதனை நகர் புறங்களுக்கு 50 ஆகவும ், ஊரகப் பகுதிகளுக்கு 60 ஆகவும் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுமட்டுமின்ற ி, சாதாரண தொலைபேசியிலிருந்து செல்பேசிக்கு செய்யப்படும் அழைப்புகளின் நேர அளவை 30 நொடிகளாக குறைத்த பி.எஸ்.என்.எல்., எதிர்ப்பிற்குப்பின் அதனை 60 நொடிகளாக உயர்த்தி கரிசனமும் காட்டியுள்ளது.

இந்த "மாபெரும்" சலுகைகளை அறிவித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோர ி, இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.3,476 கோடி நட்டமேற்படும் என்று கண்ணீர் வடித்துள்ளார்.

180 நொடிகள் கொண்ட நேர அளவிற்கு ரூ.0.80 ஆக இருந்த கட்டணத்தை ரூ.1.00 ஆகவும ், ரூ.1.20 ஆகவும் உயர்த்தியதனால் ஆண்டிற்கு எத்தனை கோடி கூடுதலாக கிடைக்கும் என்பதனை நாடாளுமன்றத்தில ோ, வெளியிலோ மூச்சுவிடாத அமைச்சர் அருண் ஷோர ி, தொன்றுதொட்டு அளிக்கப்பட்டுவந்த இலவச கால்களை பறித்துவிட்ட ு, தற்பொழுது ஓரளவிற்கு கூட்டிவிட்டு நட்டம் இத்தனை கோடி ஆகிறது என்று கூறுவது மக்கள் நலனில் அக்கறை கொண்ட அமைச்சர் கூறுவதாகத் தெரியவில்லை. இத்தனை ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறதே என்று அரற்றும் ஒரு வியபாரியின் புலம்பலாகவே தெரிகிறது.

சாதாரண தொலைபேசி பயனிட்டாளர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இலவச அழைப்புக்கள் ஏதோ ஒரு சலுகை என்பது போல அமைச்சரின் விவரிப்பு உள்ளது. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமாகும்.

இந்த அயோக்கியத்தனத்தை விளக்குவதற்கு முன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் வெளியிட்ட மற்றொரு கட்டண குறைப்பு அறிவிப்பை கவனிப்போம்.

இலவச அழைப்புக்களை மீண்டும் அதிகரித்து அமைச்சர் அருண் ஷோரி அறிவித்த மறுநாளே பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது செல்பேசி கட்டணங்களை 8.33 முதல் 67 விழுக்காடு வரை குறைத்து அறிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாதத்திற்கு ரூ.225, ரூ.325, ரூ.525 என்று 3 கட்டணத்திட்டங்களின் கீழ் தனது செல்ஒன் செல்பேசி சேவையை விற்றுவரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம ், அழைப்புக் கட்டணங்களை கடுமையாக குறைத்துள்ளது!

1. திட்டம் ரூ.225-ன் கீழ் இதுவரை ஒரு அழைப்பிற்கு ரூ.2.40 வசூலிக்கப்பட்டு வந்தது. இது ரூ.2.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

2. திட்டம் ரூ.325-ன் கீழ் இதுவரை ஒரு அழைப்பிற்கு ரூ.1.80 வசூலிக்கப்பட்டு வந்தது. இது ரூ.1.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

3. திட்டம் ரூ.525-ன் கீழ் இதுவரை ஒரு அழைப்பிற்கு ரூ.1.80 வசூலிக்கப்பட்டு வந்தது. இது ஒரு நிமிடத்திற்கு ரூ.0.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு அழைப்பின் நேர அளவு (பல்ஸ் ரேட்) 15 விநாடிகள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும ், 15 விநாடிகள் மட்டுமே செய்யப்படும் அழைப்புகளுக்கு 10 காசு மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தலைவர் பிரீத்தி பால் சிங் கூறியுள்ளார்.

முன் கட்டணம் (பிரீ பெய்ட்) செலுத்தி செல்பேசி பயன்படுத்தி வந்தவர்களுக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணமான ரூ.2.40 இதற்கு மேல் ரூ.2.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

திட்டம் 225-ன் கீழ் செல்லில் இருந்து சாதாரண தொலைபேசிக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு ரூ.2.40 ஆகவும ், திட்டம் 325-ன் கீழ் ரூ.1.80 ஆகவும ், திட்டம் 525-ன் கீழ் ரூ.1.20 ஆகவும ், முன் கட்டண செல்பேசிக்கு ரூ.2.40 ஆகவும் வசூலிக்கப்படும் எனவும் பிரீத்தி பால் சிங் அறிவித்துள்ளார்.

இதேபோல நீண்டதூர தொலைத் தொடர்பு (எஸ்.டி.டி.) கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. 500 கி.மீ. வரை 50 விழுக்காடும ், 500 கி.மீ.-க்கு மேல் 67 விழுக்காடும் குறைத்துள்ளதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

செல்ஒன் பயனீட்டாளர்கள் எஸ்.எம்.எஸ். வசதியைப் பயன்படுத்தி அனுப்பும் தகவல்களுக்கு இதுவரை ரூ.1 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இது ரூ.0.60 ஆக வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவைகள் மட்டுமின்ற ி, மாதம் ஒன்றிற்கு ஒரு லட்சத்திற்கு மேல் ஆனால் 2 லட்சத்திற்கு குறைவாக பயனீட்டுக் கட்டணம் கட்டும் பெரும் பயனீட்டாளர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை தரப்படும் என்று அறிவித்த பிரீத்தி பால் சிங ், 2 லட்சத்திற்கும் அதிகமாக கட்டணம் செலுத்துவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் தள்ளுபடியும் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

இந்த புதிய கட்டணங்கள் இன்று - மே 17 உலக தொலைத்தொடர்பு தினம் - முதல் நடைமுறைக்கு வருகிறது.

செல்பேசியில் இருந்து செல்பேசிக்குச் செய்யப்படும் அழைப்புக்களின் மீது 20 பைசா முதல் 80 பைசா வரை குறைத்து புரட்சி செய்துள்ளது பி.எஸ்.என்.எல்.!

அதிலும் ரூ.525 திட்டத்தின் கீழ் ஒரு நிமிட நேர அழைப்பு ஒன்றிற்கு 40 காசுகளே என்றும ், 15 விநாடிகள் கொண்ட நேர அளவு கொண்ட அழைப்புகளாக அது கணக்கிடப்படும் என்றும ், 15 நொடிகள் மட்டுமே பேசினால் 10 காசு மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் பிரீத்தி பால் சிங் அறிவித்துள்ளார்.

இதேபோல மத்திய அரசின் மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல்-லும் தலைநகர் டெல்லிக்கென்று பிரத்யேகமான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் புதிய "கருடா" திட்டங்களை தொலைத் தொடர்பு அமைச்சர் அருண் ஷோரி இன்று துவக்கி வைத்துள்ளார்.

அதன்பட ி, ரூ.200 திட்டத்தின் கீழ் எந்த செல்பேசிகளை அழைத்தாலும் நிமிடத்திற்கு 55 காசு கட்டணம் என்றும ், தொலைபேசிகளுக்கு நிமிடத்திற்கு 75 காசு என்றும ்,

ரூ.399 திட்டத்தின் கீழ் 300 இலவச அழைப்புகளுடன் செல்பேசி அழைப்புகளுக்கு 50 காசும ், தொலைபேசி அழைப்புகளுக்கும் 70 காசு என்றும ்,

ரூ.699 திட்டத்தின் கீழ் 700 இலவச அழைப்புகளும ், செல்பேசி அழைப்புகளுக்கு 45 hகசும ், தொலைபேசிகளுக்கு 65 காசு என்றும ்,

ரூ.1199 திட்டத்தின் கீழ் 1,500 இலவச அழைப்புகளுடன ், செல்பேசி அழைப்புகளுக்கு 40 காசும ், தொலைபேசிக்கு 60 காசு என்றும் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

நமது கேள்வி என்னவென்றால ், சாதாரண தொலைபேசி பயனீட்டாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்தியும ், அழைப்பு நேர அளவை குறைத்தும ், இதுவரை அளிக்கப்பட்டுவந்த இலவச அழைப்புக்களின் எண்ணிக்கையை குறைத்தும் சுமையை ஏற்றிய பி.எஸ்.என்.எல்.லும ், எம்.டி.என்.எல்.லும் தங்களது செல்பேசி கட்டணங்களை மட்டும் இவ்வளவு புரட்சிகரமாக குறைத்தது எப்பட ி?

சாதாரண தொலைபேசி பயனீட்டாளர்களிடமிருந்து பறித்த இலவச அழைப்பு எண்ணிக்கையை மேலும் 20, 30 என்று உயர்த்தியதாலும ், தொலைபேசியில் இருந்து செல்பேசிக்கு செய்யும் அழைப்புகள் மீதான கட்டணத்தை 50 விழுக்காடு குறைத்ததனாலும் ரூ.3,476 கோடி இழப்பு ஏற்படும் என்று புலம்பிய அமைச்சர் அருண் ஷோர ி, செல்பேசி கட்டணங்களை இந்த அளவிற்கு குறைத்ததனால் ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதை சொல்லாதது ஏன ்?

செல்பேசி கட்டண அறிவிப்பை வெளியிட் பி.எஸ்.என்.எல். தலைவர் பிரீத்தி பால் சிங ், கட்டணக் குறைப்பால் ஏற்படும் நட்டம் என்ன என்பது பற்றிய ோ, அதனை எவ்வாறு ஈடுகட்டப்போகிறார்கள் என்பதையோ பற்றி ஒன்றும் கூறாதது ஏன ்?

அதேபோ ல, எம்.டி.என்.எல். புதிய செல்பேசி திட்டங்களை அறிவித்த அமைச்சர் அருண் ஷோர ி, அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படும் என்பது குறித்து ஏதும் பேசாதது ஏன ்?

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

Show comments