Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரியமில வாயுவிற்கு பூமி எதிர்பார்த்ததை விட எதிர்விளைவு காட்டுகிறது

கரியமில வாயுவிற்கு பூமி எதிர்பார்த்ததை விட எதிர்விளைவு காட்டுகிறது
, செவ்வாய், 8 டிசம்பர் 2009 (11:48 IST)
முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டதை விட கரியமிலவாயு வெளியேற்றத்திற்கு பூமி அதிகப்படியாக எதிர்விளைவு ஆற்றுகிறது என்று பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் "நேச்சர் ஜியோ சயன்ஸ்" பத்திரிகையில் முழுதும் வெளியிடப்பட்டுள்ளது.

நிலப்பனி முதல் தாவர உருவாக்க காலகட்டம் வரை பூமியின் பருவநிலைக் கூறுகள் பல்வேறு விதமாக மாறிவந்துள்ளன. இதனடிப்படையில் பார்த்தால் நாம் நினைப்பதை விட கரியமில வாயுவிற்கு பூமி அதிகப்படியான எதிர்விளைவு ஆற்றியுள்ளது என்று தெரிகிறது என்று ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றங்களுக்கான அரசுகளுக்கிடையான குழு (IPCC)வின் ஆய்வு மாதிரிகளில் இது போன்ற நீண்ட கால புவிப் பருவநிலைக்கூறுகள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்று இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய டேன் லண்ட் கூறியுள்ளார்.

கடலுக்கு அடியில் உள்ள தரைப்பகுதியில் 3 மில்லியன் ஆண்டு பழைய படிவுகளை ஆய்வு செய்து வெப்ப நிலை மாற்ற மறுகட்டுமானங்களை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது. அதாவது 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலக வெப்ப அளவும், கரியமிலவாயு அடைவும் இப்போதைவிட அதிகம் இருந்த காலக்கட்டம் அது.

இந்த ஆய்வில் பங்கேற்ற லீட்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலன் ஹேய்வுட் "அபாயகரமான பருவநிலை மாற்றங்களை நாம் தவிர்க்க வேண்டுமென்றால், கரியமிலவாயுவிற்கு பூமி நாம் நினைப்பதைவிட அதிக எதிர்விளைவாற்றுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும், இதனால் வெப்ப வாயு வெளியேற்றத்தை குறைக்க இலக்கு நிர்ணயிக்கும்போது இதனை பரிசீலித்து பெரிய அளவில் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது." என்று எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil