Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோபன்ஹேகன் மாநாடு மகிழ்ச்சியாக முடியும் - ஐ.நா. நம்பிக்கை

கோபன்ஹேகன் மாநாடு மகிழ்ச்சியாக முடியும் - ஐ.நா. நம்பிக்கை
, திங்கள், 7 டிசம்பர் 2009 (15:02 IST)
192 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. வானிலை மாற்ற மாநாடு இன்று துவங்கவுள்ள நிலையில் அதன் முடிவு மகிழ்ச்சிதரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ.நா. நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் சில் நாடுகள் தாங்களாகவே மனமுவந்து வெப்ப வாயு வெளியேற்ற அளவைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது இந்த மாநாட்டை வெற்றிகரமாக கொண்டு செல்லும் என்று ஐ.நா. முதன்மை வானிலை மாற்ற அதிகாரி போயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடுகள் வெப்பவாயு வெளியேற்றத்தை அதிக அளவில் குறைக்க வேண்டிய தேவையை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையுள்ளது என்று போயர் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அடுத்த 10 ஆண்டுகளில் 34% வெப்ப வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு அந்த நாடு 42% என்ற அதிகபட்ச குறைப்பு நிலையை எட்டும் என்று போயர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா கடைசி இரண்டு தினங்களில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது ஒப்பந்தம் சுமுகமாக நிறைவேறும் என்பதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

வானிலை மாற்றம் குறித்த மாநாட்டில், இதுவரையல்லாத அளவுக்கு நாடுகள் தாங்களாகவே ஒத்துழைப்பு அளித்ததில்லை என்று கூறிய போயர் இந்த விஷய்ம்தான் இந்த மாநாட்டை மிகப்பெரிய ஒரு நிகழ்வாக மாற்றியுள்ளது என்றார்.

ஆனால் ஐ.நா. விஞ்ஞானிகள் நிர்ணயித்த அளவுகோல்களின் படி நாடுகள் வெப்ப வாயு வெளியேற்றத்தை குறைப்பதில் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதாவது சராசரி வெப்ப நிலை 2டிகிரி செல்சியஸிற்கு மிகாமல் பார்த்துக் கொள்வதுதான் இன்றைய வளரும், வளர்ந்த நாடுகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று சுற்றுசூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் வளரும் நாடுகளின் பிரதி நிதிகளோ, வளர்ந்த நாடுகள் திரைக்குப் பின்னால் சில ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு ஏழை நாடுகளின் நலன்களை கண்டு கொள்ளமாட்டார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil