Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபன் ஹேகன் வானிலை மாற்ற மாநாடு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

Webdunia
சனி, 5 டிசம்பர் 2009 (20:05 IST)
டிசம்பர ் 7 ஆம் தேதி முதல் டிசம்பர ் 18 ஆம் தேதி வரை டென்மார்க் தலைநகர் கோபன ் ஹேகனில் புவி வெப்பமடைதலின் விளைவாக ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்கள் குறித்த மாநாடு நடைபெறுகிறத ு. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விவாதிக்கின்றனர ்.

வெப்ப வாயு (கரியமில வாயு, மீத்தேன் உள்ளிட்ட) வெளியேற்றத்தில் வளர்ந்த நாடுகள் மட்டுமே பெரும்பங்கு வெப்ப வாயுக்களை வெளியேற்றி வருவதால ் அந்த நாடுகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் பல்வேறு கனரக தொழில் நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, வெப்ப வாயு வெளியேற்றத்தை பெருமளவு குறைக்கவேண்டும் என்று இதற்கு முன்னால் நடைபெற்ற கியோட்டோ (ஜப்பான்) மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டத ு.

ஆனால் அதனை செயல்படுத்த ஒத்துழைப்பு தருவதில் அமெரிக்கா கடுமையான மறுப்புகளை தெரிவித்து வருகிறத ு. பிரான்ஸ ், ஹங்கேர ி, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் அமெரிக்காவிற்கு கடுமையான அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவருகின்றனர ். இந்த நிலையில் தீர்மானமா ன, தீவிரமாக நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பந்தத்தை இந்த முறை கையெழுத்திட அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளுக்கு வளரும் நாடுகள் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.

இதனால் மட்டுமின்றி புவி வெப்பமடைதல் என்ற உண்மையை பல்வேறு நிறுவனம் சார்ந்த விஞ்ஞானிகளை வைத்து மறைத்தும ், மறுத்தும் வரும் ஒரு போக்கிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதாலும் கோபன்ஹேகன் மாநாடு முக்கியத்துவம் பெறுகிறத ு.

வளரும் நாடுகளுக்கும ், வளர்ந்த நாடுகளுக்கும் இடையிலான ஒரு பெரிய பிளவு இந்த வானிலை மாற்ற விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டை உலகத் தலைவர்கள் எதிர்நோக்குகின்றனர ்.

வளரும் நாடுகள் தங்கள் வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று வளரும் நாடுகள் நிர்பந்தப்படுத்தி வரும் நிலையில் உண்மை என்னவெனில ், அமெரிக்காவின் தனி நபர் வெப்பவாயு வெளியேற்ற விகிதத்தை ஒப்பு நோக்கும் போது இந்திய ா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தனி நபர் வெப்ப வாயு வெளியேற்றம ் 20 இல் ஒரு பங்கு என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்ற ன.

ஆனால் வானிலை மாற்றங்களினால ், கடல் நீர்மட்டம் உயர்தல ், பனிமலைகள் உருகுதல ், துருவப் பனிப்படலங்கள் முற்றிலும் அழிதல ், பருவம் தவறிய மழ ை, பெரும் புயல்கள ், தொடர்ந்த வெப்பநிலை உயர்வு ஆகியவற்றின் விளைவுகளான பஞ்சம ், குடிநீர் பற்றாக்குற ை, உலகளாவிய உணவுப் பற்றாக்குற ை, விவசாயம் முற்றிலும் அழிதல் போன்றவையால் அதிகம் பாதிக்கப்படப்போவது உலகின் ஏழை நாடுகளே என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எதுவும் இருக்க நியாயமில்ல ை.

வானிலை மாற்ற உண்மைகளும் புள்ளி விவரங்களும ்

1. 1850 ஆம் ஆண்டிலிருந்த ு, அதாவது புவி வெப்ப நிலை கணக்கீடு துவங்கிய ஆண்டு முதல ் 12 ஆண்டுகள் மிகவும் வெப்பமான ஆண்டுகளாக இருந்துள்ளத ு.

2. 19 ஆம் நூற்றாண்டின் பிந்தைய இரண்டாம் பாதி முதல் புவி வெப்பம ் ஆண்டிற்கு 0.76 டிகிரி அதிகரித்துள்ளத ு. குறிப்பாக கடந் த 50 ஆண்டுகளில் அதிகரித்து வரும் புவி வெப்பம் அதற்கு முந்தை ய 100 ஆண்டுகளின் அதிகரிப்பைக் காட்டிலும் இரு மடங்காகியுள்ளத ு. இன்றே உலகம் முழுதும் வெப்ப வாயு வெளியேற்றத்தை நிறுத்தினாலும ், வான்வெளி மாறா நில ை (Atmospheric Inertia) காரணமாக வெப்பம் அதிகரிக்கும ். அதாவது அந்த அளவுக்கு இது வரை வானிலை மாற்றங்களை ஏற்ப்டுத்தியுள்ளோம ்.

3. 1750 ஆம் ஆண்டு முதல் வான்வெளி கரியமிலவாயு அடைவ ு 35% ஆக அதிகரித்துள்ளத ு. உலக பனிச்சிகரங்களின் பனி அளவின் மீது மேற்கொண்ட சோதனைகளின் அடிப்படையில் இது நிறுவப்பட்டுள்ளத ு.

4. கடல்களில ் 3000 மீ ஆழம் வரை சராசர ி நீர் வெப்ப நிலை அதிகரித்துள்ளத ு. 80 சதவீத வெப்ப அதிகரிப்பை கடல் தனக்குள் உறிஞ்சிக் கொள்கிறத ு. இதனால் வெப்ப நிலை அதிகரித்த ு, கடல் நீர்மட்ட உயர்வை தீவிரப்படுத்துகிறத ு.

5. தற்போது கடல் நீர்மட்டம் உலகம் முழுதும் ஆண்டொன்றிற்க ு 3 ம ி. ம ீ. அளவு உயர்ந்து வருகிறத ு. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும ் 17 ச ெ. மீ கடல் நீர் மட்டம் அதிகரித்துள்ளத ு. 1961 முதல ் 2003 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட கடல் நீர்மட்ட உயர்வ ு 1993- 2003 காலக் கட்டத்தில ் 42% வேகமடைந்துள்ளத ு.

6. வட துருவத்தின் கடந் த 50 ஆண்டுகால சராசரி வெப்ப அளவு கடந் த 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளத ு.

7. ஆர்டிக் பிரதேசத்தில ் 1978 ஆம் ஆண்டிற்கு பிறகு கடல் பனிப் படலம ் 8% அழிந்துள்ளத ு. கோடைக்காலங்களில ் 22% பனிப்படலங்கள் உருகிவருகின்ற ன.

8. புவி வெப்பமடைதல் மற்றும் கடல் நீர் வெப்பமடைதல ், பனி அழிவு ஆகியவை புவி வெப்பமடைதல் என்ற ஒன்று இயற்கையாக நிகழ்வது என்ற கோட்பாட்டை மறுத்து மனித நடவடிக்கைகளால் தாக்கம் பெறுவது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகிறத ு.

9. 1990 ஆம் ஆண்டு முதல ் 2100 ஆம் ஆண்டிற்குள் கடல் நீர் மட்டம ் 18 ச ெ. மீ முதல ் 59 ச ெ. மீ வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.

10. வெப்ப அலைகள ், பஞ்சம ், கடுமையான மழ ை, ஆகியவை அடிக்கடி ஏற்படுவதோட ு, புயற்காற்று அதி தீவிரமடைவதும் நிகழும ்.

விளைவுகள் என் ன?

உணவ ு: உலகம் முழுவதும் பயிர் விளைச்சலில் கடும் பாதிப்ப ு.

நீர் ஆதாரம ்: சிறிய பனிமலைகள் முழுதும் உருகிவிடும ். பல இடங்கலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும ். வட இந்திய ா, திபெத ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும ், மத்தியத் தரைக் கடல் நாடுகள ், தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் நீர் ஆதாரங்கள் வற்றி விடும் அபாயம ். கடல் நீர் மட்ட உயர்வால் முக்கிய நகரங்கள் பாதிப்படையும ்.

சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்புகள ்: பவளப்பாறைகளுக்கு ஏற்படும் தீவிர பாதிப்ப ு. உயிர்ப் ப்ரவலை பாதுகாக்கும் முக்கிய உயிரிகளின் அழிவு அதிகரிக்கும ்.

தட்பவெப்ப நிலைகளில் எதிர்பாராத திடுக்கிடும் மாற்றங்கள ்: புயற்காற்றின் தீவிரம் அதிகரிக்கும ். காட்டுத்தீயின் அதிகரிப்ப ு, வறட்ச ி, வெள்ளம ், வெப்ப அலைகள ்.

மேலும் கண்ணுக்கு புலப்படாத சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுத்தும் இனம்புரியாத தீமை விளைவுகள ்.

இத்தகைய மோசமான விளைவுகளை வளரும் நாடுகள் எழை நாடுகள் மீது திணித்து வருகிறத ு. ஒரு காலத்தில் அடிமை வியாபாரம ், காலனியாதிக்கத்தின் மூலம் பலவீனமான மற்ற நாடுகளின் வளங்களைச் சுரண்டி "முன்னேற்றம ்" கண்ட இந்த வளரும் நாடுகள், தங்கள் அடைந்த முன்னேற்றத்தினால் ஏற்படுத்திய புவி மை ய விளைவுகளினால் மற்ற நாடுகளை மேலும் மோசமான நிலைக்கு தள்ள ஆயத்தமாகிவருகின்ற ன.

வளரும் நாடுகளும ், தே ச- அரசுகளும ் Sustainable Growth என்று கூறும்போது பூமியைப் பாதுகாக்கும் பொருளாதார வளர்ச்சியா அல்லது பொருளாதாரத்தை மட்டும் பாதுகாக்கும் வளர்ச்சியா என்பதில் இருண்மை உள்ளத ு. நமக்கு அழிக்க உரிமையல்லாத ஒன்றை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஒப்பந்தமா அல்லது உண்மையில் பூமியை அதன் அனைத்து உயிரினங்கள் பொருட்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பதற்கான அவசியத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமா என்பதெல்லாம் இந்த மாநாடு முடிந்தவுடன் தெரியும ்.

ஆனால் எந்த ஒரு ஒப்பந்தமும் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாத ு. மேலும் மோசமடையத்தான் அதிக வாய்ப்பு என்று உலகின் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்சன் கூறுகிறார ்.

வளரும் நாடுகளிடம் பசுமை தொழில் நுட்பம் உள்ளத ு, எனவே கார்பன் தொழில்நுட்பச் சந்தைகளை உருவாக்கி வளரும் நாடுகளுக்கு விற்று பிழைப்பைத் தொடர வேண்டியதுதான ், வளரும் நாடுகளும் வளர பணம் வேண்டாம ா? என்றெல்லாம் கடும் ஐயங்களை ஒரு இருண்ட நகைச்சுவையுடன் அவர் கூறிவருகிறர ்.

அதாவது புவி வெப்பமடைதலின் விளைவுகளை உலக நாடுகள் தீவிர நிலையில் உணரவேண்டுமென்றால் அது இவ்வாறான ஒப்பந்தங்களாக இருக்காத ு. என்று கூறும் ஹான்சன ், நிலைமையின் தீவிரத்தை வரலாற்றின் வேறு ஒரு காலக்கட்டத்துடன் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளார ்.

அதாவது அடிமைமுறையை ஒழிப்பத ு, நாஜிகளை ஒடுக்குவது போன்ற விவகாரம் போல்தான் இதன் தீவிரமும் இருக்கவேண்டும ், இதில் நாம் ஒரு போதும் சமரசத்திற்கு ஒப்புக் கொள்ளக்கூடாத ு.

அதாவது அடிமை முறையை முதலில் நாம ் 50% ஒழிப்போம ், அல்லத ு 40% ஒழிப்போம் என்றெல்லாம் பேச முடியும ா? அது போல்தான் வெப்ப வாயு வெளியேற்றமும். இதில் அனைவரும் ஒன்று கூடி ஒவ்வொரு நாடும் குறைக்கும் அளவை வெளியிடுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்று கூறுவது போல் உள்ளது ஹான்சனின் தீவிர நிலைப்பாட ு.

சுற்றுச்சூழல் விவகாரம ், பூமிக்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சரியாக புரிந்து கொண்ட ு, உணமையில் என் ன செய்யப்படவேண்டும் என்பதைக் கூறும் ஒரு தலைமை இல்ல ை, பதிலாக நாம் வர்த்தகத்தை தொடரத் தலைப்படுகிறோம் என்று ஹான்சன் கூறுவது நிலவரத்தின் உண்மையை நமக்கு உணர்த்துவதாய் உள்ளத ு..

ஆனால் அவர் எதிர்மறை சிந்தனாவாதி அல் ல. மாறாக அவர் புவி வெப்பமடைதலை தடுக்க ஏதாவது செய்தாகவேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டுகிறார ்.

நிலக்கரிச் சுரங்கங்கள்தான் கரியமில வாயு வெளியேற்றத்தில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறத ு. ஹான்சன் நிலக்கரித் தொழிற்துறையை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார ்.

எனவே இத்தகைய சுற்றுச்சுழல் நெருக்கட ி ( இந்த வார்த்தைகூட போதாதுதான ்!) நிலையில் கோபன் ஹேகன் மாநாடு திங்களன்று துவங்குகிறத ு.

பூமியை தேச அரசுகள் கைவிட்டுவிட முடிவெடுக்கும ா, அல்லது அல்லது சேதங்களை குறைக்க முடிவெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்: நூலிழையில் உயிர் தப்பிய WHO தலைவர்

இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை

இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்துள்ளது… மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு எப்போது? காங்கிரஸ் அறிவிப்பு..!

குறைவாக பேசி, அதிகமாக செய்தார்: மன்மோகன் சிங்கிற்கு விஜய் இரங்கல்..!

Show comments