Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 5 பைசா உயர்வு!

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2008 (13:18 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.

காலை வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலர் ரூ. 42.87/42.88 என்ற அளவில் இருந்தது.

இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.

நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர் ரூ. 42.82/42.83.

காலை பங்குச் சந்தை ஆரம்பிக்கும் போது அதிக அளவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன. பிறகு அந்நிய முதலீடு வருவது அதிகரித்ததால் பங்குச் சந்தை முன்னேறியது.

இதனால் அந்நியச் ச ெலா வணி சந்தையில் 1 டாலர் ரூ. 42.83/42.85 என்ற விலையில் விற்பனையானது. பிறகு மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது.

ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான போக்கு இருந்தது. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மீண்டும் சுமார் 136 டாலராக அதிகரித்தது. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்கியதால், இதன் மதிப்பு உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments