Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 2500 கோடி டாலர்!

Webdunia
புதன், 21 மே 2008 (18:10 IST)
இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடு, சென்ற நிதி ஆண்டில் (2007-08) 2,500 கோடி டாலரை எட்டியுள்ளது என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் தெரிவித்தார்.

லண்டனில் பைனான்ஷியல் ந ிய ூஸ் என்ற பிரபல நாளிதழ், டோவ் ஜோன்ஸ் மற்றும் வால்ஸ்டிரிட் ஜெர்னலுடன் இணைந்து இந்திய முதலீட்டாளர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் வர்த்தகம், தொழில் துறையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கு, தற்போது நிலவும் சமூக, நிதி மற்றும் பொருளாதார அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் அஷ்வினி குமார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், இந்தியாவில் சென்ற நிதி ஆண்டில் 2,500 கோடி டால‌ர் மதிப்பிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் அந்நியச் ச ெலா வணி கைய ிர ுப்பு 34,100 கோடி டாலரையும் தாண்டிவிட்டது.

இந்தியாவில் அடுத்த கட்டமாக திறன் பெற்ற தொழிலாளர்களின் பங்கேற்புடன், உற்பத்தி துறையின் வளர்ச்சி இருக்கும் என்று கூறினார்.

இந்த மாநாட்டில் அஷ்வினி குமார், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கல்வியை வழங்குவதன் மூலம் திறனை வளர்ப்பதற்கும், சுகாதார துறையின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திட்டங்களை செய்ல்படுத்தி வருவதை விளக்கினார்.

அத்துடன் அவர ், மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு, இந்தியாவின் பொருளாதார சீர்திருத்ததை பற்றியும், இது இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த அளவு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கின்றது என்பதை விளக்கினார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 (மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்ப ு ) விழுக்காடாக தொடர்ந்து இருக்கும் என்று கூறிய அவர ், இதற்கான காரணத்தையும் விளக்கினார்.

அவர் இதுபற்றி கூறும்போது, இந்தியாவில் அதிக அளவு இளம் வயதுடைய உழைக்கும் திறன் கொண்டவர்கள் உள்ளனர். (மொத்த மக்கள் தொகையில் 24 விழுக்காடு 28 வயதிற்கும் குறைவாக உள்ளவர்கள். மக்கள் தொகையில் 54 விழுக்காட்டினர் வேலை செய்யும் நிலையில் உள்ளவர்கள்). இந்தியாவின் சேமிப்பு திறனும், முதலீடு செய்யும் திறனும் அதிக அளவு உள்ளது (மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 35 விழுக்காட்டிற்கும் அதிகமாக)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் உள்நாட்டு சேமிப்பும், அதன் வாயிலாக முதலீடும் தான். இதனால் தான் அமெரிக்க நிதி நெருக்கடியில் பாதிக்கப்படாமல் இருந்தது. கவலை தரும் நிலையில் உள்ள பணவீக்கம், கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சேவைத்துறைக்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது. இந்த துறை 4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், இதன் வருவாய் 20,000 கோடி டாலர் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

இன்று, நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

செல்லப்பிராணிகளுக்கு ரயிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு.. ஆனால் இது கட்டாயம்..!

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

Show comments