Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 10 பைசா சரிவு!

Webdunia
வியாழன், 15 மே 2008 (12:31 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 10 பைசா அதிகரித்தது.

பங்குச் சந்தையில் சாதகமான நிலை இருப்பதாலும், ஏற்றுமதி நிறுவனங்கள், சில அந்நிய வங்கிகள் டாலரை விற்பனை செய்தன. இதனால் டாலர் வரத்து அதிகரித்தது. இது போன்ற காரணங்களினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.42.44 / 42.45 என்ற அளவில் தொடங்கியது.

அதன் பிறகு வர்த்தகம் நடக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது. 1 டாலர் ரூ. 42.34/42.35 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 10 பைசா அதிகம்.

நேற்றை இறுதி விலை 1 டாலர் ரூ. 42.44/42.46.

நேற்று அந்நியச் செலாவணி சந்தையின் இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 பைசா குறைந்தது. அதே போல் யூரோவுக்கு நிகரான மதிப்பும் 30 பைசாவும், பிரிட்டன் ஃபவுண்ட்டுக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா குறைந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

Show comments