Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிமெணட் விலை குறையுமா?

சிமெணட் விலை குறையுமா?
, சனி, 10 மே 2008 (13:46 IST)
சிமெண்ட் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

மத்திய அரசு விலை உயர்வினால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு அம்சமாக சென்ற புதன்கிழமையன்று, பிரதமர் மன்மோகன் சிங் உருக்கு ஆலை அதிபர்களையும், நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உருக்கு ஆலைகள், உருக்கு விலையை டன்னுக்கு ரூ.4000 வரை குறைக்க சம்மதித்தன.

நேற்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம், மத்திய அரசு சிமெண்ட் விலையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் விலையை சிமெண்ட் ஆலைகள் குறைக்க சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அதிக அளவு சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஏ.சி.சி சிமெண்ட், நேற்று அடுத்த 2 முதல் 3 மாதங்கள் வரை சிமெண்ட் விலையை குறைக்க போவதில்லை என்று மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்தது. அத்துடன் இதன் எல்லா சிமெண்ட் ஆலைகளிலும் அதிகபட்சமாக உற்பத்தி செய்வது என தீர்மானித்து இருப்பதாகவும் தெரிவித்தது.

அத்துடன் இது உற்பத்தி செலவு அதிகரிப்பது பற்றியும், விலை உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி அரசுடன் திறந்த மனதுடன் விவாதிக்க உள்ளதாக அறிவித்தது.

கொல்கத்தைவைச் சேர்ந்த ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் கூறுகையில், தங்கள் நிறுவனம் ஏற்கனவே மே மாதத்தில், ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களுக்கு 50 கிலோ சிமெண் மூட்டைக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை குறைத்துள்ளதாகவும், குஜராத் மாநிலத்தில் விற்பனை செய்யும் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.7 வரை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

வட மாநிலிங்களில் அதிக அளவு சிமெண்ட் விற்பனை செய்யும, ஜே.கே லட்சுமி சிமெண்ட் நிறுவனம் விலையை குறைக்க போவதில்லை என்று அறிவித்துள்ளது.

அஸ்ஸாம், திரிபுரா, மிஜோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் சிமெண்ட் விற்பனையில் முன்னணி நிறுவனமான பாரக் வேலி சிமெண்ட் நிறுவனம், மற்ற சிமெண்ட் உற்பத்தியாளர்கள் விலையை குறைத்தால், நாங்களும் குறைப்போம் என்று கூறியது.

சிமெண்ட் உற்பத்தியாளர்களின் மத்திய சங்கமான சிமெண் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஹெச்.எம்.பங்கூர் கூறுகையில், சிமெண்ட் விலையை பொறுத்த மட்டில் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதன் விலை சந்தையை பொறுத்தது என்று கூறினார்.

அவரிடம், ஏ.சி.சி நிறுவனம் விலையை குறைப்பதில்லை என்று அறிவித்துள்ளது. இதையே மற்ற நிறுவனங்களும் பின்பற்றுமா என்று கேட்டதற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தன்னிச்சையாக விலையை நிர்ணயிப்பது பற்றி முடிவு எடுக்கலாம்.

அதே நேரத்தில் சிமெணட் விலை உயர வாய்ப்பில்லை. ஒரு நிறுவனம் விலையை உயர்த்துவது இல்லை என்று தீர்மானித்தால், மற்ற நிறுவனங்கள் விலையை உயர்த்துவது கடினம். விலை உயர்வை தடுக்க அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று பஙகூர் கூறினார்.

தற்போது 50 கிலோ சிமெண்ட் மூட்டையின் விலை ரூ.200 முதல் 260 வரை உள்ளது. தென் மாநிலம், மேற்கு மாநிலங்களில் மற்ற பகுதியை விட அதிகமாக இருக்கின்றது.

மத்திய அரசின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை, சிமெண்ட் விலை ஆலைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதன் விபரங்களை பிரதமர் அலுவலகத்திற்கும், நிதி அமைச்சகத்திற்கும் ஏற்கனவே தெரிவித்துள்ளது. அத்துடன் நிர்வாக ரீதியாகவும், வரி குறைப்பு போன்ற பொருளாதார ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனையையும் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil