Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லரை வணிக நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மென்பொருள்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (16:24 IST)
சிறு வணிக நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் கணினியில் கணக்கு பராமரிக்கும் மென்பொருள் அமைப்பை கோஃப்ரிகல் டெக்னாலஜிஸ் என்று மென்பொருள் வடிவமைப்பு நிறுவனமும், சன் மைக்ரோ சிஸ்டமும் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்த புதிய மென்பொருள் அமைப்பை பற்றி இன்று சென்னையில் சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தைச் சேர்ந்த சில்லரை வணிக பிரிவு இயக்குனர் பிரியதர்ஷி மகாபத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவத ு:

இந்த மென்பொருள் அமைப்பு உணவு விடுதி, மளிகை கடை, மருந்து கடை, நகை கடை போன்ற எல்லா வணிக நிறுவனங்களும் பயன்படுத்தலாம். இது சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களுக்கு. பயன் அளிக்கும் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வணிக நிறுவனத்தில் பில் போடுவது, சர்வர், தகவல் சேமிப்பு, ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்தல், மென் பொருள் உரிமம் போன்ற எல்லா வசதிகளையும் ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலவாகும்.

இதன் மூலம் விற்பனை செய்யப்படும பொருட்களுக்கு பில் போடுவது, கொள்முதல், கணக்கு பதிவு, வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல் போன்றவைகளை எளிதில் பராமரிக்கலாம் என்று கூறினார்.

கோஃப்ரிகல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குமார் வேம்பு கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் வடிமைப்பு மென்பொருள் சன் மைக்ரோ சிஸ்டத்தின் எல்லா அமைப்புகளிலும் இயங்கும். சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் மென்பொருள் போன்றவைகளை வடிவமைக்க சன் மைக்ரோ சிஸ்டத்தின் அமைப்புகள் பயனுள்ளதாக உள்ளது என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments