Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் ஏற்றுமதி அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 5 மே 2008 (18:52 IST)
இந்தியாவின் வெங்காயம் ஏற்றுமதி 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து மாகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயம் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் வெங்காய ஏற்றுமதி 12 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கும் தேசிய விவசாய விளைபொருட்கள் கூட்டுறவு விற்பணை இணையத்தின் (நஃபிட ் ) தகவல்படி, ஏப்ரல் மாதத்தில் 88,000 முதல் 90 ஆயிரம் டன் வரை வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சென்ற நிதி ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் 80,120 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

வெங்காயத்தின் விலை உள்நாட்டில் அதிகரிக்காத வண்ணம், குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நஃபிட் நிர்ணயிக்கின்றது. இதனால் உள்நாட்டில் வெங்காயம் விலை அதிகரிக்காமல் கண்காணிக்கப்படுகிறது.

தென் மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தின் குறைந்த பட்ச ஏற்றுமதி விலை ஏப்ரல் மாதம் டன்னுக்கு 300 டாலர் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மே மாத ஏற்றுமதி விலையை 350 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் இருந்து ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட மாநிலங்களில் குறிப்பாக மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் நாசிக் ரக வெங்காயம் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

Show comments