Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்க இலக்கு!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (15:44 IST)
திருப்பூரில் இருந்து இந்த நிதி ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூரில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்கு பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சென்ற வருடம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 விழுக்காடு வரை அதிகரித்தது. இதனால் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின் னல ாடையின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. எந்த நேரமும் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பர பலகைகள் தொங்கும், திருப்பூரில் முதன் முறையாக வேலையில்லாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிதி ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதியை 25 விழுக்காடு வரை அதிகரிக்க திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ஏ.சக்திவேல் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை பாதிக்கப்பட்டது. சென்ற வருடம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய வருடத ்தை விட பத்து விழுக்காடு குறைவு.

இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி பாதிக்காமல் இருக்க, பின்னலாடை நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவை உற்பத்தி செலவை குறைத்தல், உற்பத்தி திறனை அதிகரித்தல், அந்நிய நாடுகளின் சந்தையில் போட்டியை சமாளித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

செயற்கை உரம், பூச்சி மருந்து போன்றவை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் பருத்தியில் இருந்து தயாரிக்கப்படும் பின்னலாடைக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இயற்கையான முறையிலான பருத்தியில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளை வ ா‌ ங்கி ஏற்றுமதி செய்யும் முயற்சியில் ஏற்றுமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சீனா உற்பத்தி செலவு அதிகரித்த காரணத்தினால், ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடை விலையை 12 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் பல அந்நிய நாட்டு நிறுவனங்கள் திருப்பூரில் பின்னலாடைகளை வாங்க துவங்குவார்கள்.

மத்திய அரசிடம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் “ பின்னலாட ை தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்த ை “ சமர்பித்துள்ளது. ரூ.17 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை மத்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் படி பல்வேறு ரக துணிகளை உற்பத்தி செய்வது, ஆ‌ ய்வு கூடம் போன்றவைகள் அமைக்கப்படும். இதற்காக 12 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டப்படும். இதில் வடிவமைப்பு கூடம், நவீன உயர்ரக பின்னலாடையை தயாரிப்பதற்கு தேவையான பின்னலாடை இயந்திரம் நிறுவப்படும் என்று சக்திவேல் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments