Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌னிய விலையில் சமையல் எண்ணெய்: சிதம்பரம்!

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (16:40 IST)
உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ம ா‌ன ிய விலையில் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்று மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் இன்று பட்ஜெட் விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய சிதம்பரம், அரிசி, கோதுமை ஆகியவை தேவையை விட, அதிக அளவு உற்பத்தியாகி உள்ளது. இதனால் இவைகளின் தட்டுப்பாடு ஏற்படாது. 2007-08 ஆம் ஆண்டில் 95.68 மில்லியன் டன் நெல் உற்பத்தியாகியுள்ளது. அதே போல் கோதுமை உற்பத்தி 76.78 டன்னாக உள்ளது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும் போது, இரண்டு உணவு த ா‌ன ியங்களும் இதுவரை இல்லாத அளவு உற்பத்தியாகியுள்ளன. உணவுப் பொருட்களின் உற்பத்தியில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை.

நேற்றைய நிலவரப்படி (ஏப்ரல் 28 ) கோதுமை 134 லட்சம் டன் கொள்மு த‌ல் செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 76.32 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வருடம் பஞ்ச ா‌ப ், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கோதுமை விளைச்சல் அபர ி‌‌ம ிதமாக இருக்கின்றது. இதனால் கொள்முதல் இலக்கான 150 லட்சம் டன்னை தாண்டிவிடும்.

ஆந்திரா, ஒரிசா, சத்தீஷ்கர் மாநில விவசாயிகளின் முயற்சியால் நெல் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதுவரை 229 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நெல் கொள்முதல் 270 லடசம் டன்னை எட்டிவிடும்.

‌ நியாய‌விலை கடைகளில் சமையல் எண்ணெய் ம ா‌ன ிய விலையில் வழங்கப்படும். 1 லிட்டர் சமையல் எண்ணெய்க்கு அரசு ரூ.15 ம ா‌ன ியம் வழங்கும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments