Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு மாற்றமில்லை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (13:29 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் அதிக மாற்றமில்லை.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.17 முதல் ரூ.40.22 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி நிலவரம் 1 டாலர் ரூ.40.17 / 18.

பஙகுச் சந்தையில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் அதிக மாற்றம் இருக்காது என்று வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

பெட்ரோலிய நிறுவனங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்கு பணம் வழங்குவதற்காக நேற்று டாலர் வாங்கின. இன்றும் இவை டாலர் வாங்கும் என்று தெரிகிறது.

அத்துடன் ஆசிய நாடுகளுக்கு விற்பனை செய்யும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் 1 பீப்பாய் விலை 110 டாலராக அதிகரித்துள்ளது.

இன்று அந்நிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது, ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்வதை பொறுத்தே இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு இருக்கும்.

அதே நேரத்தில் நேற்று பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 15 லட்சம் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments