Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிமெ‌ண்ட் ஏற்றுமதிக்கு தடை!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (19:03 IST)
சிம ெ‌ண ்ட் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு சிமெண்ட் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

உள்நாட்டின் தேவையை விட, சிமெண்ட் உற்பத்தி குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதிக ்கு‌த ் தடை விதிப்பதாக இன்று புதுடெல்லியில் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும் போது, சிமெண்ட் மற்றும் உருக்கு ஏற்றுமதி மேம்பாட்டிற்காக வழங்கி வந்த ஊக்கத் தொகையும் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அயல் நாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிடும்.

சிமெண்ட் விலை தொடர்ந்து அத்கரித்து வருகிறது. இந்த மாதம் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் விலையை 3 முதல் 4 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன. இதனால் 50 கிலோ உள்ள போர்லான்ட் சிமெண்ட் விலை ரூ.5 முதல் 7 வரை உயர்ந்துள்ளது. சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல், எரி எண்ணெய் விலை உயர்வு, மதிப்பு கூட்டு வரி போன்றவையை காரணம் என்று சிமெண்ட் ஆலைகள் கூறுகின்றன.

இன்று மத்திய அரசு அயல் வர்த்தக கொள்கையை அறிவித்த உடனேயே, அரிசி, உருக்கு, சிமெண்ட் ஏற்றுமதிக்கு வழங்கி வந்த ஊக்க தொகையை நிறுத்துவதாக அறிவித்தது. ஏற்கனவே அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இன்று சிமெண்ட் ஏற்றுமதிக்கும் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments