Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்பேர வர்த்தக வரி மறு பரிசீலனை: பவார்!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (16:05 IST)
பண்டக சந்தையில் நடைபெறும் முன் பேர வர்த்தகத்திற்கு வரி விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய விவசாய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார ்.

பங்குச் சந்தையில் நடைபெறும் வர்த்தகத்திற்கு செக்யூரிட்டி டிரான்செக்சன் டாக்ஸ் என்ற வரி விதிக்கப்படுகிறத ு. இதே மாதிரி பண்டக சந்தையில் நடைபெறும் முன்பேர வர்த்தகத்திற்கும் கமோடிட்டி டிரான்செக்சன் டாக்ஸ் என் ற, பண்டக வர்த்தக வரியை விதிப்பதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பட்ஜெட்டில் அறிவித்தார ்.

இந்த வரி விதிப்பதால் முன்பேர வர்த்தகத்திற்கு செலவு அதிகரிக்கும ா, நீங்கள் இந்த வரியை நீக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா என்று சரத்பவாரிடம் கேட்டதற்க ு, இந்த வரி விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தான் நிதி அமைச்சர் சிதம்பரத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாக பவார் தெரிவித்தார ்.

மேலும் அவர் கூறுகையில ், இந்த வரி விதிப்பினால் பண்டக முன்பேர சந்தையின் வர்த்ககம் தானாகவே குறைந்த ு, இறுதியில் முழுவதுமாக நின்று விடும் என்று கூறினார ்.

பண்டக சந்தையின் முன்பேர வர்த்தகத்தால் பல பொருட்களின் விலை அதிகரிப்பதாக கூறப்படுகின்றதே என்று பவாரிடம் கேட்டதற்க ு, முன்பேர வர்த்தகத்தால் பொருட்களின் விலை அதிகரிப்பதாக அரசு நினைக்கவில்ல ை.

பண்டக சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மீதான முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டத ு. இதை பரிசீலனை செய்வதற்காக அபிஜித் சென் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளத ு.

சென்ற வருடம் அரிச ி, கோதுமை உட்பட சில உணவு தானியங்கள் மீதான முன்பேர வர்த்தகம் தடை செய்யப்பட்டத ு. இந்த தடையால் எந்த பொருளின் விலையும் குறையவில்லை என்று சரத் பவார் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments