Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் மதிப்பு 13 பைசா உயர்வு!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (13:46 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்ப ு 13 பைச ா அதிகரித்தத ு.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.34/40.35 என்ற அளவில் இருந்தது. பிறகு வர்த்தகம் நடக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் அதிகரித்தது. 1 டாலர் ரூ.40.32/40.33 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி விலையை விட 0.13 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.45/40.46.

பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் 560 அதிகரித்தது.

அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் நடந்த போது ரூபாயின் மதிப்பு மூன்று முதல் நான்கு பைசா வரை அதிகரித்தது. அமெரி்க்க பொருளாதார நெருக்கடியை தீர்க்க, அந்நாட்டு ரிசர்வ் வங்கி 200 பில்லியன் டாலரை கடன் கொடுக்கும் வங்கி, நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளது. இதனால் இந்த வங்கி, நிதி நிறுவனங்களின் நெருக்கடி தீரும். அத்துடன் இவை புதிய கடன்களை மக்களுக்கு வழங்கும். இதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பதால், பல்வேறு உற்பத்தி பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். இது தற்காலிகமாக பொருளாதார நெருக்கடியை தீர்க்கும்.

இதனால் அமெரிக்க பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இதனை தொடர்ந்து இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் உயர்ந்தன.

பங்குச் சந்தையின் உயர்வு காரணாக அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் வரத்து அதிக அளவு இருக்கும். இதனால் டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்தது.

இன்று அந்நியச் சந்தையின் போக்கு, பங்குச் சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கத்தை பொறுத்தே இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments