Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 17 பைசா உயர்வு!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (13:00 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான இந ்‌த ிய ரூபாய் மதிப்பு 17 பைசா குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் மதிப்பு ரூ.40.47/40.48 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய மாலை விலையை விட 17 பைசா அதிகம். நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 40.30/40.31.

அந்நியச் செலாவணி சந்தையில் அதிக அளவு டாலர் வரத்து உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த அளவு டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு முதன்முறையாக இன்று குறைந்தது.

சர்வதேச அந்நியச் செலவாணி சந்தையில் யூரோ,யென் போன்ற மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதால், டாலரை அதிக அளவு விற்பனை செய்கின்றனர். இதனால்தான் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments