Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரப்பர் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும்!

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2008 (14:01 IST)
அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் டயரால் ஏற்படும் போட்டியை சமாளிக்க, இயற்கை ரப்பர் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று டயர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய நிதி-நிலை அறிக்கையில் (பட்ஜெட ்) இடம் பெற வேண்டிய கோரிக்கைகள் குறித்து, இந்திய வாகன டயர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவத ு:

டயர் உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால், இறக்குமதி செய்யப்படும் டயர்களுடன் உள்நாட்டு டயர் உற்பத்தியாளர்களால் போட்டி போட முடியவில்லை.

இதனால் டயர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்களின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும். உள்நாட்டில் தயாரிக்காமல் இருக்கும் சில வகை மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும்.
1996-97 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்படும் டயர்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. இது தற்போது 10 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இயற்கை ரப்பருக்கான வரி 20 விழுக்காடு என்பது மாற்றி அமைக்கப்படாமல் அப்படியே தொடர்கிறது.

இயற்கை ரப்பருக்கான இறக்குமதி வரியை 20 விழுக்காட்டில் இருந்து 7.5 விழுக்காடாக குறைக்க வேண்டும். இதே போல் அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயரின் இறக்குமதி வரியை 20 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
இந்தியாவில் டயர் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களான பாலியெஸ்டர் டயர் கார்ட், ஸ்டெய்ரினி புடாடின் டயர் கிரேட் ரப்பர், புரோமோ பைட்டல் ஆகியவை உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதன் இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும்.

இப்போது சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து டயர் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது. அந்நிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த டயர்களில் பயணிகள் காரின் டயர்களில் 60 விழுக்காடு்ம், சரக்கு போக்குவரத்து வாகன டயர்களி்ல 80 விழுக்காடும் இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகிறது.

இயற்கை ரப்பருக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை விட, முழுவதுமாக தயாரிக்கப்பட்ட டயரின் இறக்குமதி வரி குறைவாக இருக்கின்றது. இதனால் உள்நாட்டு டயர் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

எனவே அரசு உள்நாட்டு டயர் தொழிற்சாலைகள் சர்வதேச அளவில் போட்டி போடும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்கள் மீது குவிப்பு வரி விதிக்கப்பட்டாலும், உள்நாட்டு டயரின் விலையை விட, சீன டயரின் விலை 20 விழுக்காடு வரை குறைவாக இருக்கின்றது.

இந்தியாவில் தேய்மானம் ஆனதற்கு பதிலாக புதிதாக மாற்றப்படும் டயர்களில் 14 விழுக்காடு இறக்குமதி செய்யப்பட்டவையாக இருக்கின்றது. இவ்வாறு அதிக அளவு மாற்றப்படுவதில், சீன டயர்களே அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இத்துடன் ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மலிவாக இருக்கின்றது. இதில் டயரும் விதிவிலக்கல்ல. குவிப்பு வரி இல்லாத ரேடியல் டயர்கள் அதிக அளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் அதிக அளவு நைலான் டயர்களே உற்பத்தி செய்யப்படுகின்றன. ரேடியல் டயர்கள் 3 விழுக்காடு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments