Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007 - 08 இந்திய ஏற்றுமதி 150 பில்லியன் டாலர்!

Webdunia
புதன், 23 ஜனவரி 2008 (20:22 IST)
நடப்பு 2007 - 08 ஆம் நிதி ஆண்டில் ஏற்றுமதி இலக்கு 160 பில்லியன் டாலராக நிரிணயிக்கப்பட்டிருந்த நிலையில ், இதுவரை 150 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி மேலும் உயர்ந்து 155 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று ஏற்றுமதி மேம்பாட்டு வாரியச் செயலர் பிள்ளை தெரிவித்துள்ளார். நடப்பு 2007 -08 நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 8 மாதங்களில் ஏற்றுமதி 98 பில்லியன் டாலரை எட்டியதாகவும ், இந்தக் காலக்கட்டத்தில் வளர்ச்சி விகிதம் 22 விழுக்காடாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பு 2007 - 08 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி இலக்கு 160 பில்லியன் டாலராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில ், 2007 ஆம் ஆண்டில் ரூபாயின் மதிப்பு 12 விழுக்காடு அதிகரித்தது. ரூபாயின் இந்த மதிப்பு உயர்வால் தொழிலாளர்கள் அதிகம் ஈடுபட்டுள்ள ஆயத்த ஆடை உள்ளிட்ட ஜவுளித் துற ை, கைவினைப் பொருட்கள ், தோல் பொருள் உற்பத்தி ஆகிய துறைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்த 2008 -09 ஆம் நிதியாண்டில் ஏற்றுமதி 200 பில்லியன் டாலராக உயரக் கூடிய சாதகமான நிலை உள்ளதாகவும் பிள்ளை தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments