Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியக்கவைத்த டாடாவின் மக்கள் கார் " நானோ"

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:21 IST)
webdunia photoWD
சர்வதேச அளவி்ல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான மக்கள் கார் " நான ோ" வை நேற்று டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார்.

இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் வாகனத் தாயரிப்பில் உள்ள நிறுவனங்கள் ஆச்சரியப்படும் வகையில், ரூ.1 லட்சம் விலையுள்ள் காரை இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வாங்குவதற்கு வசதியாக ரூ.1 லட்சம் விலையில் கார் தயாரிக்கப்படும் என்று அறிவித்தது. அப்போது எல்லோரும் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்றே கூறினார்கள்.

ஆனால் ரத்தன் டாடா நான்கு வருடங்களுக்கு முன் கூறிய உறுதி மொழியை, இன்று நிறைவேற்றி உள்ளார்.
இந்த நான்கு வருடங்களில் கார் தயாரிக்க தேவையான உருக்கு, ரப்பர், போன்ற பல பொருட்களின் விலை அதிகரித்தாலும், ரூ.1 லட்சத்தில் காரை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

webdunia photoWD
இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த அளவு மலிவான விலைக்கு காரை தயாரிக்க் முடியாது. அப்படியே தயாரித்தாலும் அது பாதுகாப்பானதாகவோ, நீண்ட காலம் உழைக்க கூடியதாகவோ இருக்காது என்று கூறி வந்தன.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரத்தன் டாடா பேசுகையில், காரின் முன்புறம், மற்றும் பக்க வாட்டில் மோதலை ஏற்படுத்திய சோதனையிலும் நானோ பாதுகாப்பானதாக உள்ளது. இதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது. இது ஈரோ நான்கு மாசு கட்டுப்பாடு விதிமுறைகள் படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று இதன் அறிமுக விழாவில் பங்கேற்ற சுமார் 3 ஆயிரம் பார்வையாளர்களின் கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார்.

வரலாற்றை சிறிது பின்னோக்கி பார்த்தோம் என்றால், கார் வாங்க வேண்டும் என்ற நடுத்தர வருவாய் பிரிவினரின் கனவை நனவாக்கிய ஆண்டு 1980. இந்த ஆண்டில் மாருதி-800 ரக கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இதன் விலை ரூ.48 ஆயிரம்.

இதற்கு பின் சுமார் 25 ஆண்டுகள் கழித்து டாடா மோட்டார்ஸ் நானோ என்ற் பெயரிடப்பட்டுள்ள நடுத்தர வருவாய் பிரிவினர் உட்பட எல்லா தரப்பு மக்களும் வாங்கும் விலையில் காரை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் நானோவை, மாருதி-800 ரக காருடன் ஒப்பிடுகையில், இதன் அளவு 8 விழுக்காடு சிறியது. அதே நேரத்தில் உள் அளவு 21 விழுக்காடு அதிகம். இதில் நான்கு பேர் வரை பயணம் செய்யலாம். இது பல ரகங்களில் கிடைக்கும். சாதாரண ரகம், குளிர்சாதன வசதியுடன் கூடிய இரண்டு டீலக்ஸ் ரகங்களிலும் கிடைக்கும் என்று கூறினார்.

webdunia photoWD
இது இரண்டு சிலிண்டரில் இயங்கும் பெட்ரோலில் ஓடக்கூடிய நானோ காரில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு நெடுஞ் சாலைகளில் 22 முதல் 26 கிலோ மீட்டர் பயணம் செய்யலாம். இதன் நீளம் 3.1 மீட்டர். உயரம் 1.6 மீட்டர். உள்பக்க அளவு 1.5 மீட்டர் இதில் உள்ள பெட்ரோல் டாங்க் 30 லிட்டர் பெட்ரோல் கொள்ளவு கொண்டது. நான்கு கியர்கள், முன் சக்கரத்தில் டிஸ்க், பின் சக்கரத்தில் டிரக் பிரேக் தொழில் நுட்பத்தில் தயாரிககப்பட்டுள்ளது. இது பின் சக்கரத்தில் உந்து விசையில் இயங்கக் கூடியது. இது செப்டம்பர் மாதம் வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விற்பனை விலை ரூ.1 லட்சம். இதற்கு 12.5 விழுக்காடு மதிப்பு கூட்டு வரி, தொழிற்சாலையில் இருந்து கொண்டு வர போக்கு வரத்து செலவு, மற்றும் இதர செலவுகளையும் சேர்த்தால் இதன் விலை ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என தெரிகிறது.

மக்கள் கார் " நானோ"

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments