Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (16:54 IST)
ஐக்கிய அரபு குடியரசில் ஒரு குடியரசாக உள்ள துபாய் அதிகளவு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

துபாய் வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் அறிக்கையில் இருந்து கடந்த ஐந்து ஆணடுகளில் (2002-06) துபாய் ஏற்றுமதியை அதிகப்படுத்தி உள்ளது. துபாய் கடந்த வருடம் 621.4 பில்லியன் (1 பில்லியன் 100 கோட ி) தினார் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

துபாய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஈரான் முதல் இடத்தில் உள்ளது. ஈரானுக்கு சென்ற வருடம் 94.3 பில்லியன் தினார் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவிற்கு 68.3 பில்லியன் தினார் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது துபாயின் மொத்த ஏற்றுமதியில் 11 விழுக்காடாகும்.

மூன்றாவது இடத்தில் உள்ள சவுதி அரேபியாவிற்கு 35.4 பில்லியன் தினார் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் துபாயில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வது ஒவ்வொருவருடமும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கான ஏற்றுமதி வருடத்திற்கு 71 விழுக்காடு அதிகரிக்கிறது.

ஆனால் ஈரானுக்கான ஏற்றுமதி 21.3 விழுக்காடும், சவூதி அரேபியாவிற்கான ஏற்றுமதி 12 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது

கடந்த ஐந்து ஆண்டுகளில் துபாயின் ஏற்றுமதி வருடத்திற்கு 28 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு குடியரசுக்கான ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து 2006-06 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு குடியரசுக்கு 31.6 பில்லியன் தினார் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 17 விழுக்காடு அதிகம். ( 2004-05 இல் 27 பில்லியன் தினார ்). இந்தியாவில் இருந்து அதிகளவு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு குடியரசு இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் அமெரிக்கா இருக்கின்றது.

ஆனால் ஐக்கிய அரசு குடியரசின் இறக்குமதியாளர் பட்டியலில் இந்தியாவிற்கு ஆறாம் இடமே. இதில் முதல் இடத்தில் ஐப்பானு்ம், இதற்து அடுத்து முறையே அமெரிக்கா,ஜெர்மனி,சீனா,பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்று உள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments