Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (12:39 IST)
இரும்பு தாது சுரங்கங்கள் உள்ள மாநிலங்களிலேயே உருக்கு ஆலைகளை அமைக்க வேண்டும். அத்துடன் இரும்பு தாது ஏற்றுமதியை கட்டுபடுத்த வேண்டும் மாநில முதல்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஜார்கண்ட், ஒரிசா, சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பூமிக்கு அடியில் ஏராளமான இரும்பு தாது உள்ளன. இதை வெட்டி எடுத்து உள்நாட்டு இரும்பாலை, உருக்கு ஆலைக்கு அனுப்ப படுகின்றன. அத்துடன் அந்நிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மத்திய அரசு புதிய சுரங்க கொள்கையை அறிவிக்க உள்ளது. இதன்படி பூமிக்கடியில் உள்ள பல்வேறு தாதுக்களை வெட்டி எடுப்பது, சுரங்கங்களை அமைப்பது, ஏற்றுமதி,வர்த்தகம், மாநில அரசுகளுக்கு ராயல்டி போன்ற அம்சங்கள் இடம் பெற உள்ளன.

இந்த புதிய சுரங்க கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, நான்கு மாநில முதல் அமைச்சர்களும் இணைந்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது புதிய சுரங்க கொள்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதித்னர். மாநில முதல்வர்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் இரும்பு தாது வெட்டி எடுக்கப்படும் மாநிலத்திலேயே இரும்பாலை, உருக்காலை அமைக்கப்பட வேண்டும். அத்துடன் இரும்பு தாது ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.





















எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments