Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நார் பொருட்கள் ரூ.45 கோடி ஏற்றுமதி ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:27 IST)
தேங்காய் நாரினால் தயாரிக்கப்படும் மிதியடி, தரை விரிப்பு போன்ற பொருட்கள் ரூ.45 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கொச்சியில் சமீபத்தில் சர்வதேச நார் பொருட்கள் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து நார் பொருட்கள் இறக்குமதியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வர்ததக கண்காட்சியை நடத்திய காயிர் போர்ட் சேர்மன் ஏ.சி.ஜோஸ் கூறியதாவது:

இந்த கண்காட்சின் போது ரூ.105 கோடிக்கான வர்ததக விசாரணை நடைபெற்றது. இது கூடிய விரைவில் வர்த்தக ஒப்பந்தமாக மாற வாய்ப்புள்ளது. இந்த கண்காட்சியால் முன்பு இருந்த அளவை விட 13.45 விழுக்காடு வர்த்தகம் அதிகரித்து இருக்கின்றது. இதில் 75 அரங்குகளில் நாரினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. உள்நாட்டில் இருந்து 100 வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர். மேலும் ரூ.35 கோடிக்கான வியாபார விசாரணை நடந்துள்ளது என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில்.. ரெய்டு சென்ற போலீஸ் அதிகாரி படுகாயம்..!

இளைஞரின் செல்போனை திருடிய குரங்கு.. கால் அட்டெண்ட் செய்து பேசியதா?

இன்று இரவுக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை அலெர்ட்!

வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை..!

Show comments