Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா : மருந்து உற்பத்தி தொழில்கள் வளர்ச்சி!

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (19:47 IST)
ஆந்திராவில் மருந்து உற்பத்தி மற்றும் விவசாய துறை சம்பந்தமான தொழில்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளன.

தென் இந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் தொழில் வளர்ச்சி குறித்து இந்திய தொழிலக கூட்டமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாத காலத்திற்கு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ள விபரங்கள் வருமாற ு:

ஆந்திராவில் மருந்து உற்பத்தி 20 முதல் 25 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதாவது 15 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது 15 முதல் 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

இந்த நிதியாண்டில் ஆந்திர மாநிலத்தில் மருந்து உற்பத்தி துறை, சென்ற வருடத்தை விட 10 முதல் 15 விழுக்காடு வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழில் துறையின் வளர்ச்சி 10 முதல் 15 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதே போல் ஜவுளித்துறையின் உற்பத்தி 12.5 முதல் 15 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் விற்பனை 8 விழுக்காடு அதிகரித்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால் ஏற்றுமதி செய்யப்பட்ட துணிகளின் மதிப்பு 5 முதல் 8 விழுக்காடு வரை குறைந்து விட்டது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments