துபாயின் ஆட்சியாளருடன் முகேஷ் அம்பானி சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (17:17 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சேர்மன் முகேஸ் அம்பானி ஐக்கிய அரபு குடியரசின் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமை துபாயில் சந்தித்தார்.

இந்த பிராந்தியத்தில் எதிர்கால முதலீடுகள் பற்றி ஷேக் முகமதுவும் முகேஷ் அம்பானியும் ஆலோசனை நடத்தியதாக துபாயின் அதிகாரபூர்வ செய்தி ஊடகம் டபிள்யூ.ஏ.எம ் ( வாம ்) தெரிவித்தது.

இந்த சந்திப்பின் போது அம்பானி துபாயின் வளர்ச்சி பற்றியும், ஷேக் முகமதுவின் நீண்ட கால திட்டங்கள் குறித்தும் பாராட்டினார். இத்துடன் ஐக்கிய அரபு குடியரசில் வர்த்தகர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் செய்து தரும் வசதிகள் பற்றியும் பாராட்டினார்.

இந்த பிராந்தியத்தில் அம்பானி குழுமத்தின் எதிர்கால முதலீடு பற்றி ஷேக் முகமது முகேஷ் அம்பாணியுடன் பரிசீலித்தார்.

இந்த சந்திப்பின் போது துபாய் விமான துறை சேர்மன் ஷேக் அகமது பின் சையத் அல் மக்தூம், எமிரேட் ஏர்லைன்சின் தலைவர் மற்றும் உடன் அதிகாரிகள் உடன் இருந்தனர் என்று வாம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்.பி. பதவிக்கு சதீஷுக்கு அருகதை இல்லையா?!. கடுப்பான பிரேமலதா!..

இது வேற லெவல். வெளங்குமடா தமிழ்நாடு: தவெகவை நக்கலடித்த ப்ளுசட்டை மாறன்

சனிப்பெயர்ச்சி விழா.. விழுப்புரத்திலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு ரயில்.. முழு விவரம்..!

இன்னும் 100 வருஷம் ஆனாலும் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வராது.. கடைசி வரை அடிமையாக இருங்க.. தவெகவினர் கிண்டல்..!

அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளையும் தாக்குவோம்.. அஜர்பைஜான் விமான நிலையத்தை தாக்கிய ஈரான்..!

Show comments