Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதிரியான மின்வெட்டு : சைமா!

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (16:36 IST)
தமிழகத்தில் மின் வெட்டை மாநிலம் முழவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும் என்று சைமா என்று அழைக்கப்படும் தென் இந்திய ஜவுளி ஆலைகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையால் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மின் நிறுத்தத்தை தமிழகம் முழுவதும் ஓர் சீராக அமல் படுத்த வேண்டும் என்று சைமா தமிழக அரசையும், தமிழக மின் வாரியத்தையும் சைமா கேட்டுக் கொண்டுள்ளது.

இதன் தலைவர் டாக்டர் கே.வி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:

“மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வெட்டு அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக சென்னை மண்டலத்தில் குறைந்த நேரத்திற்கே மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தொழில் பிரிவுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் 35 விழுக்காடு உயர் அழுத்த மின்சாரத்தை உபயோகிக்கின்றன. அவைகளுக்கு ஒதுக்கியுள்ள அளவில் 47 விழுக்காட்டை பயன்படுத்துகின்றன.

ஜவுளி ஆலைகள் பர்னேஷ் ஆயில் அல்லது உயர் வேக டீசலை எரிபொருளாக பயன்படுத்தி ஜெனரேட்டர் மூலம் சொந்தமாக மின் உற்பத்தி செய்தால், இதற்கான செலவு கட்டுபடியாகாது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் 1 யூனிட் மின்சாரத்தின் அடக்க விலை ரூ.10 முதல் ரூ.12 ஆகும். ஜவுளி ஆலைகள் மின்வாரியத்தில் இருந்து பெறும் மின் சாரத்திற்கு கட்டணம் யூனிட்டிற்கு ரூ.4.20 க்ட்டணமாக உள்ளன.

கடந்த ஒரு மாதமாக தினசரி ஒரு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். ஏற்கனவே அதிக கடன், மூலப் பொருட்களின் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு உயர்வால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுடன், மின் வெட்டு புதிதாக ஜவுளித் துறைக்கு பிரச்சனையாக உள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பல ஜவுளி ஆலைகளின் உற்பத்தி 15 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துள்ளது. இந்த பிரச்சனை வரும் கோடை காலத்தில் மேலும் அதிகரிக்கும். எனவே மாநில அரசு உடனடியாக தலையிட்டு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வெட்டை அமல் படுத்த வேண்டும ் ” என்று அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments